Last Updated : 15 Aug, 2018 08:56 AM

 

Published : 15 Aug 2018 08:56 AM
Last Updated : 15 Aug 2018 08:56 AM

உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் ஆண்டர்சன்: இங்கிலாந்து பயிற்சியாளர் புகழாரம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உலகின் மிகச் சிறந்த பவுலராக வலம் வருகிறார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிரெவார் பேலிஸ் கூறினார்.

இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஓராண்டில் அதிக அளவில் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகின்றன. ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தையொட்டி அதிக பயிற்சி ஆட்டங்களில் இந்தியா பங்கேற்கவில்லை. இதுவும் அந்த அணி தோல்விகளைப் பெறுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

3-வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்தே வெற்றி பெறும்.

இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தத் தொடரில் அருமையாக பந்துவீசி வருகிறார். உலகில் தற்போதுள்ள பவுலர்களில் அவர்தான் மிகச் சிறந்தவர் என்று நான் கூறுவேன்.

இங்கிலாந்து ஆடுகளங்களில் எந்தவொரு வீரரும் அவரது பந்தை எதிர்கொள்வது கடினம். அவர் தனது உடல்தகுதியை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளும்போது அவர் இன்னும் 4 ஆண்டுகள் வரை தொடர்ந்து விளையாட முடியும். இவ்வாறு அவர் கூறினார். - 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x