Last Updated : 14 Aug, 2018 08:00 PM

 

Published : 14 Aug 2018 08:00 PM
Last Updated : 14 Aug 2018 08:00 PM

அறியாமை, பொறுப்பின்மை, முட்டாள்தனம், தலைக்கனம்: இந்திய பேட்டிங் பற்றி ஜெஃப்ரி பாய்காட் பளார்.. பளார்..

இங்கிலாந்து தொடரில் இந்திய பேட்டிங் பற்றி ஜெஃப்ரி பாய்காட் கருத்துக் கூறிய போது, ‘அறியாமை, பொறுப்பின்மை, முட்டாள் தனம்’ என்றுய் சாடியுள்ளார்.

டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையில் எழுதியுள்ள பத்தியில் அவர் கூறியிருப்பதாவது:

இதுவரை இந்திய வீரர்கள் தங்களையும் தங்கள் ஆதரவாளர்களையும் தலைகுனிய வைத்துள்ளனர். பேட்டிங் அறியாமையும் பொறுபின்மையும் கூடியதுடன் முட்டாள்தனத்தின் எல்லையிலும் இருந்தது, அவுட் ஸ்விங்கர் வீசி கவர்ச்சி அழைப்பு விடுத்தால் யோசனையின்றி பேட்டைக் கொண்டு செல்வதா?

முரளி விஜர் ரக அவுட்களெல்லாம் எப்படியெனில், நேர் அவுட்ஸ்விங்கர்களையெல்லாம் மிட்விக்கெட்டில் ஆட முயன்று, பிறகு எட்ஜ் ஆனாலோ, பவுல்டு ஆனாலோ அதிர்ச்சியடைவது மூளையற்ற செயலாகும். பந்து வரும் போது எழும்பும் இடத்தில் கால்காப்பிற்கு முன்பாக மட்டையைக் கொண்டு சென்று ஆடுவது இங்கு முடியாது, இங்கு இல்லை.

இங்கிலாந்து பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலையில் சாதாரண ஸ்விங் பவுலர்களுக்கு எதிராகவே செய்யக் கூடாத அரிச்சுவடிகளாகும்.

அவர்கள் உட்கார்ந்து பேசி, வலைப்பயிற்சியில் பயிற்சி மேற்கொள்ளவில்லை, இங்கிலாந்தில் எப்படி வித்தியாசமாக ஆடப்போகிறோம் என்பதைத் தங்கள் மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளவேயில்லை.

இவர்கள் அனைவரும் மட்டையான, வறண்ட, பந்துகள் எழும்பாத இந்திய பிட்ச்களில் பேட் செய்தே பழக்கப்பட்டவர்கள். எளிதான ரன்களை குவித்தவர்கள். புதிய பந்துகள் அங்கு ஒன்றுமே ஆகாது, பந்தின் பளபளப்பும் விரைவில் தேய்ந்து விடும், அங்கு பேட்ஸ்மென்கள்தான் ராஜா, நேரடியாக எந்த ஷாட்களையும் ஆட முடியும்.

இங்கிலாந்துக்கு இந்திய அணி அலட்சியத்துடனும் தலைக்கனத்துடனும் வந்தனர். எங்கு வேண்டுமானாலும் தங்கள் இஷ்ட்கப்படி பேட் செய்ய முடியும், அந்தநாளில் எல்லாம் ஓகேயாகி விடும் என்ற நினைப்பில் வந்துள்ளனர். உங்கள் கிரிக்கெட்டை நீங்கள் தொடருக்கு முன் பணியாற்றி சரிசெய்யவில்லையெனில் அது உங்கள் முதுகில் அடித்து விடும்.

ட்ரெண்ட் பிரிட்ஜில் சுலபமாக இருக்கும் என்று கனவு காண வேண்டாம், இங்குதான் ஆண்டர்சன் பயங்கரமாக வீசுவார். நாட்டிங்கமில் ஆண்டர்சனின் பந்து வீச்சு தனிச்சிறப்பானது, ஸ்டூவர்ட் பிராடுக்கு சொந்த மண், ரசிகர்கள் அவருக்கு உரத்த ஆதரவுக்குரல் கொடுப்பார்கள்

பெரும்பாலாண அணிகள் உள்நாட்டில் வென்று வெளியே போய் தோற்பதால் டெஸ்ட் கிரிக்கெட் முட்டாள்தனமான பொருத்தமின்மையாக மாறி வருகிறது. நம்பர் 1 டெஸ்ட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் படுமோசம்.

பெரிய அணிகள், பெரிய வீரர்கள் பந்துகள் ஸ்விங் ஆகின்றன என்பதற்காக லார்ட்ஸில் இந்தியா போன்று மடியக் கூடாது,, வெளிநாடுகளில் ஆடுவது எதற்காக? பல்வேறு நாடுகள், பல்வேறு பிட்ச்கள், பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் நம் உத்தி, நம் பொறுமை, நம் குணம், சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை சோதித்துக் கொள்ளவே.

இவ்வாறு சாடினார் ஜெஃப்ரி பாய்காட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x