Last Updated : 13 Aug, 2018 07:59 AM

 

Published : 13 Aug 2018 07:59 AM
Last Updated : 13 Aug 2018 07:59 AM

‘லார்ட்ஸில் சதமடிக்கும் கனவு நிறைவேறியது’

புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சதமடிக்க வேண்டும் என்ற என் சிறுவயது கனவு இப்போது நிறைவேறியுள்ளது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிறிஸ் வோக்ஸ் கூறினார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாக உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் சதமடித்தார்.

சதமடித்தது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: லார்ட்ஸ் மைதானத்தில் சதமடிக்க வேண்டும் என்று நான் சிறு வயது முதலே கனவு கண்டு வந்தேன். அந்தக் கனவு இப்போதுதான் நிறைவேறியுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த பின்னர் எனக்கு ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு கொடுத்தனர். இதை எந்த நாளிலும் மறக்க முடியாது. அது ஒரு நம்ப முடியாத உணர்வாக இருந்தது.

நான் சமீபத்தில்தான் ஒரு குழந்தைக்குத் தந்தையாகி இருந்தேன். அந்த மகிழ்ச்சியை எப்படி கொண்டாடப் போகிறேன் என்று சக வீரர்கள் என் னைக் கேட்டுக் கொண்டே இருந்த னர். குழந்தை பிறந்த மகிழ்ச்சியை, சதமடித்ததுடன் இணைந்து கொண்டாடலாமா என்று மைதானத் தில் நினைத்தேன்.

லார்ட்ஸ் மைதானத்தில் சத மடித்த நிகழ்வை எப்போதும் மறக்க முடியாது. ஆனால் நான் மிகவும் சந்தோஷ மாக இருக்கிறேன் என்பதை வெளிப்படை யாகவே சொல்கிறேன்.

சதத்தை நெருங்கும்போது நான் சிறிது நேரம் பதற்றமாக இருந்தேன். ஆனால் எதிர்முனையில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோ என்னிடம் வந்து நிதானமாக விளையாடு என்று என்னை அமைதிப்படுத்தினார். அது எனக்கு உதவியது. அவரது அறிவுரையைக் கேட்டு பொறுமையாக விளையாடி சதமடித்தேன்.

முதல் இன்னிங்ஸில் விராட் கோலியை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தது திருப்தியளிக்கிறது. அவர் ஒரு உலகத் தரம்வாய்ந்த வீரர். டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். அவர்தான் இந்திய பேட்டிங் வரிசைக்கு தூண் போல இருப்பவர். நேற்றைய ஆட்டத்தின்போது பந்துகள் நகர்வது எளிதாக இருந்தது. இதைக் கணிக்காமல் ஆடிய விராட் கோலி குறைந்த ரன்களில் வீழ்ந்தார்.

இவ்வாறு அவர் கூறினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x