Published : 09 Aug 2018 06:17 PM
Last Updated : 09 Aug 2018 06:17 PM

ஜிவா..என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்

என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தைப் பார்த்தவர்கள் அனைவருக்கும் ஜிவாவின் சுட்டித்தனம், பேச்சு, விளையாட்டுத்தனம்  அனைத்தும் தெரிந்திருக்கும். சிஎஸ்கே வீரர்களின் குழந்தைகளும் அழைத்துவரப்பட்டு தோனியின் குழந்தைகளுடன் விளையாடியதால், வீரர்கள் அனைவருமே மகிழ்ச்சியில் இருந்தனர்.

அதிலும் தோனியின் மகள் ஜிவா ஊடகங்கள் வெளிச்சத்துக்கு வருவது இது முதல்முறையாக அல்ல,  அவர், மலையாளத்தில் கிருஷ்ணன் பாடலை பாடியபோதே ட்விட்டரிலும், இன்ட்ராகிராமிலும் ரசிகர்கள் கூட்டமும், கூர்ந்து கவனிப்பவரக்ளும் குவிந்தனர். மழலையான குரலையும், பேச்சையும் கேட்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில், மும்பையில் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தோனி பங்கேற்றார். அப்போது அவரிடம் (இந்து அங்கிலம்) நமது நிருபர் தனிப்பட்ட முறையில் உரையாடினார். அப்போது அவரிடம் சமீபக காலமாக உங்கள் மகள் ஜிவா மீது ஊடகங்கள் வெளிச்சம், பார்வை அதிகமாகி இருக்கிறதே எனக் கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது:

நான் விரும்புகிறேனோ, இல்லையோ, எனது மகள் ஜிவா மீது அதிகமான ஊடகங்கள் பார்வை விழுவதைப் பார்க்கிறேன். அவளைச் சுற்றி எப்போதும் சிலர் இருப்பது நல்லது என்றே நான் கருதுகிறேன். ஜிவா சுட்டிக்குழந்தை, துறுதுறுவென ஓடிக்கொண்டே இருப்பாள். அவள் என்ன செய்தாலும் கவனமாக இருப்பாள். ஆதலால், அவளுக்கு அடிபட்டுவிடும் என்று கவலைப்படத் தேவையில்லை.

நம்முடைய மனஅழுத்தத்தைப் போக்க சிலர் நம்மைச்சுற்றி இருப்பது நல்லதுதான். மூன்றரைவயதுதான் ஜிவாவுக்கு ஆனாலும், அவளுடைய பழக்கவழக்கம், நடவடிக்கை வித்தியாசமாக இருக்கிறது. ஆதலால் என்னைச் சுற்றி எப்போதும் என் மகள் இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன். என்னுடைய மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாக ஜிவா இருக்கிறாள்.

எங்கு நான் சென்றாலும் என்னைச் சந்திக்கும் நபர்கள் ஜிவா குறித்துத்தான் கேட்கிறார்கள், எங்கே இருக்கிறாள் ஜிவா, என்ன செய்கிறார் என்று கேட்கிறார்கள். இப்போதெல்லாம் ஊடகங்களில் என்னைப் பற்றி பேசுவதைக்காட்டிலும் ஜிவா குறித்துத்தான் பேசுகிறார்கள்

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x