Last Updated : 07 Aug, 2018 01:04 PM

 

Published : 07 Aug 2018 01:04 PM
Last Updated : 07 Aug 2018 01:04 PM

தோனி, டிராவிட், கோலி போன்ற நல்ல குணமுள்ளவர்கள்ள் கிரிக்கெட்டுக்குத் தேவை: ஐசிசி புகழாரம்

 வாழ்க்கையில் நல்ல குணமும், நல்ல ஒழுக்கமான நடவடிக்கையும் கொண்ட வீரர்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் அவசியம். அதிலும் தோனி, டிராவிட், கோலி போன்ற வீரர்கள் கிரிக்கெட்டுக்கு அவசியம் என்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் புகழாரம் சூட்டியுள்ளார்

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

இன்றைய சூழலில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டைக் காட்டிலும், வீரர்களின் ஒழுக்கமான நடவடிக்கையும், நல்ல குணங்களும்தான் முக்கியம்.

கோலின் மில்பர்ன்ஸ், பிளிண்டாப், ஷேன் வார்ன், விராட் கோலி, பென் ஸ்டோக்ஸ், தோனி, ராகுல் டிராவிட் போன்ற ஒழுக்கமான வீரர்கள் ஜென்டில்மேன் கிரிக்கெட்டின் மான்பை காத்து தங்களுக்கு உரிய எல்லையைமீறாமல் இருப்பார்கள். இதுபோன்ற நல்ல குணம் கொண்டவர்கள்தான் அவசியமாகும்.

ஆடுகளத்தில் வீரர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் ஐசிசி தனிப்பட்ட முறையில் தீர்வுகாண்பதைக் காட்டிலும், கூட்டாக சேர்ந்து தீர்வுகாண வேண்டும்.

வீரர்களைத் தனிப்பட்டமுறையில் திட்டுவது, பேட்ஸ்மேன்களை சென்ட்ஆப் செய்வது, தேவையில்லாமல் உடலில் உரசுவது, நடுவரின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விளையாடாமல் வீரர்கள் புறக்கணிப்பது, பந்தை சேதப்படுத்துதல், இவையெல்லாமல் கிரிக்கெட்டின் ஒழுக்கமான விஷயங்கள் அல்ல. உலகிற்கு நல்ல விதமான கிரிக்கெட்டை நாம் கற்பிக்க வேண்டும்.

இது போன்ற தவறான நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் குறைப்பதற்காக வீரர்களைத் தனிப்பட்ட முறையில் சீண்டினால், 6 டெஸ்ட்போட்டி அல்லது 12 ஒருநாள் போட்டிகளுக்கு வீரர்களுக்குத் தடைவிதிக்கும் கடும் விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டை நல்ல உத்வேகத்துடன் எப்படி விளையாவது, ஜென்டில்மேன் கேமின் மாண்பு குறையாமல் எப்படிக் காப்பது என்பதை வீரர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் நடக்கும்போது, எதிரணியினரை மரியாதையாக நடத்தும் கொள்கைகளை மதித்து நடக்க வேண்டும். சுற்றுலா வந்திருக்கும் அணியை மதிப்புடன் நடத்தி, அவர்களுக்குத் தேவையான பயிற்சி வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றைச் சிறந்த முறையில் உள்நாட்டு அணி ஏற்பாடு செய்து தர வேண்டும்.

சில நேரங்களில் அணியின் பயிற்சியாளர்களும், வீரர்களின் ஒழுக்கமற்ற செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். நடுவருக்கு எதிராகப் பேசுகிறார்கள், போட்டி நடுவரின் அறைக்குச் சென்று புகார் அளிக்கிறார்கள்.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி என்பது அவசியம்தான். ஆனால், போட்டியின் நன்னம்பிக்கையை குலைத்துவிட்டு, சமரசம் செய்துவிட்டு வெற்றியைத் தேடக்கூடாது. பந்தைசேதப்படுத்துதல் போன்ற நடவடிக்கை கிரிக்கெட்டின் மாண்புக்கு தகுதியில்லாத செயல், கபடமான செயல் என்பது வீரர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன்

இவ்வாறு ரிச்சார்ட்சன் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x