Published : 07 Aug 2018 11:01 AM
Last Updated : 07 Aug 2018 11:01 AM

கோலியை வீழ்த்த புதிய வியூகம்: இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர பேலிஸ் தகவல்

இந்திய அணிக்கு எதிராக எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்ஸ்மேன் களில் கேப்டன் விராட் கோலி யைத் தவிர அனைவரும், இரு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன் களில் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சுக்கு இரையானார்கள்.

இதற்கிடையே இரு அணிகளுக் கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணி யில் பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலானுக்குப் பதிலாக ஆலிவர் போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலை யில் 2-வது போட்டியில் இங்கி லாந்து வீரர்கள் எப்படி கள யுத்தியை செயல்படுத்தப் போகிறார் கள் என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ் கூறியதாவது:

உலக கிரிக்கெட்டில் விராட் கோலி மட்டும் சிறந்த பேட்ஸ்மேனாக இல் லாமல் இருந்திருந்தால், அவரை எப்போதோ எங்கள் வீரர்கள் ஆட்டமிழக்கச் செய்திருப்பார்கள். முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் விராட் கோலியின் பேட்டிங் மிக அற்புதமாக இருந் தது. விராட் கோலிக்கு கொடுக்கும் நெருக்கடியை, அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் நாங்கள் கொடுக்கப் போகிறோம். அவர் களுக்குப் பந்துவீச்சில் நாங்கள் கொடுக்கும் நெருக்கடியால், அவர்கள் விக்கெட்டை எளிதாக இழப்பார்கள். அந்த அழுத்தம் முழுவதையும் கேப்டன் கோலி மீது சுமத்துவார்கள். இதனால் கோலிக்கு அழுத்தம் அதிகரிக்கும், விக்கெட்டை இழப்பார். இதுதான் எங்கள் யுத்தியாகும்.

விராட் கோலிக்கு மற்ற வீரர்களால் அழுத்தம் ஏற் படும். முதல் டெஸ்ட் போட்டி யின் 4 இன்னிங்ஸிலும் அனை த்து பேட்ஸ்மேன்களும் சிரமங்

களை சந்தித்தனர். விராட் கோலி கூட தொடக்கத்தில் சவுகர்ய மாக விளையாடினார் என நான் நினைக்கவில்லை. பேட் செய்வ தற்கு மிக கடினமாகவே இருந்தது, இது வெளியே இருந்து பார்ப்பதை விட கடினமாக இருந்தது.

இந்திய அணி சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளது. நாங்கள் அதிகம் வேட்டையாடுவதற்கு இங்கே இருக்கிறோம். பந்துகள் நகரும் போது இந்திய அணியின் பேட் ஸ்மேன்கள் சிரமத்தை சந்திப்பதை நாங்கள் பார்த்தோம். இதுபோன்ற பந்துகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்கான பணி களில் ஈடுபடுவார்கள் என நம்புகிறேன். எங்கள் அணியினரும் சுழற்பந்துவீச்சைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

பென் ஸ்டோக்ஸ் போட்டிக்கு தயாராகும் முறையும், போட்டியை அணுகும் முறையும் இதற்கு முன்னர் இருந்ததில் இருந்து எந்த வித்தியாசமும் இல்லை. அவரிடம் இருந்து ஏதாவது ஒரு வகையிலான திறன் வெளிவரும் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அவர் தங்கமானவர். அவரது இடத்தை யார் எடுத்துக் கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க சுவராசியமாகவே இருக் கும். ஆனால் அதைப்பற்றி என க்கு கவலை இல்லை. பென் ஸ்டோக்ஸூக்கும் கூட அந்த கவலை இல்லை என்பது சிறப்பான விஷயம். உண்மையாகவே இது போன்ற ஒரு சூழ்நிலை நடக்கக் கூடாது எனவே நாங்கள் விரும்பினோம்.

கிறிஸ் வோக்ஸ் சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். முதல் நாள் பயிற்சியில் 14 ஓவர்கள் வரை வீசி விட்டு, டி 20 போட்டிகளில் விளை யாடச் சென்றுவிட்டார். அவர் டெஸ்ட் போட்டிக்கான முறைக்கு திரும்பி விடுவார். உடற் தகுதி அடிப்படையில் அவர் சிறப் பாக உள்ளார். நாங்கள் இரண்டா வது சிறந்த அணியை தேர்வு செய்யப்போவது இல்லை, ஏனெனில் அவர்கள் அனைவரும் வலது கை வீரர்களே. அஸ்வின் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் எதிராக சிறப்பாக பந்து வீசக்கூடியவர். அதிலும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக கூடுதல் திறனுடன் வீசுவார்.

இதனால் அவருக்கு எதிராக சற்று வித்தியாசமாக விளையாடுவது எப்படி என்பது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்த வேண்டும். டேவிட் மலான் சிலப்பில் சில கேட்ச்களை தவறவிட்டார். சிலிப் பீல்டிங்கில் நாங்கள் சிறந்த வீரர் களை கொண்டுள்ளோம். ஜாஸ் பட்லர் தற்போதுதான் அணிக் குள் வந்துள்ளார். கீட்டன் ஜென்னிங்ஸூம் சிறந்த நகர்வை கொண்டுள்ளார். இது நம்பிக்கை சார்ந்த விஷயம். மற்றவர்களைவிட இதில் நாங்கள் அதிகம் உழைக்கிறோம்.

இவ்வாறு பேலிஸிஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x