Published : 04 Aug 2018 08:46 PM
Last Updated : 04 Aug 2018 08:46 PM

டெய்ல் எண்டர்களுடன் பேட் செய்வது எப்படி என்பதை விராட் கோலியிடமிருந்து கற்றேன்: சாம் கரன்

இங்கிலாந்து அணியின் வெற்றிக்குக் காரணமான இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன், 2வது இன்னிங்சில் ஒரு மேட்ச் வின்ன்ங் பேட்டிங்கைச் செய்து காட்டினார், இந்திய அணியும் கேட்ச்களை விட்டு அவருக்கு உதவியது ஒருபுறம் இருக்கட்டும், அவர் விராட் கோலி முதல் இன்னிங்சில் டெய்ல் எண்டர்களை வைத்துக் கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டதிலிருந்து தானும் கற்றுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

“அனைத்துப் பெருமைகளையும் நான் இப்போது எடுத்துக் கொள்ள முடியாது, நான் கனவு காண்பதைப்போல்தான் உணர்கிறேன். உள்ளபடியே கூற வேண்டுமெனில் முதல் இன்னிங்சில் விராட் கோலி கீழ்வரிசை வீரர்களுடன் எப்படி பேட் செய்தார் என்பதைப் பார்த்தேன், அதிலிருந்து கற்றுக் கொண்டேன்.

சங்கக்காராவை இன்னொரு நாள் விடுதியில் சந்தித்தேன். அவர் டெய்ல் எண்டர்களுடன் விளையாடுவது பற்றி என்னிடம் சிறிது உரையாடினார்.

இத்தகைய ரசிகர்கள் முன்னிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை அதுவும் இந்த வீர்ர்களுடன் ஆடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை, நான் கிரிக்கெட்டைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்தவர்ன், ஒவ்வொரு நாளுமே கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்றார் ஆட்ட நாயகன் சாம் கரன்.

முதல் இன்னிங்ஸில் 50/0 என்று இருந்த இந்திய அணியின் 3 விக்கெட்டுகளை சடுதியில் வீழ்த்தி பிரச்சினைக்குள்ளாக்கிய சாம் கரன் பிறகு இன்னொரு விக்கெட்டையும் வீழ்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 2வது இன்னிங்ஸில் 87/7 என்று தோல்வியின் பிடியிலிருந்த இங்கிலாந்தை தன் அதிரடி அரைசதம் மூலம் வெற்றிப்பாதைக்குத் திருப்பினார், ஆகவே ஆட்ட நாயகன் விருதுக்கு அனைத்துத் தகுதிகளையும் அவர் உடையவராகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x