Published : 01 Aug 2018 03:32 PM
Last Updated : 01 Aug 2018 03:32 PM

டாஸ் வென்றது இங்கிலாந்து: இந்திய அணியில் என்ன மாற்றம்?

பர்மிங்ஹாமில் தொடங்கியுள்ள இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பேட் செய்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20,டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் கோட்டைவிட்டது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாம் நகரில் தொடங்கி இருக்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு டிராவிட் தலைமையில் பெற்ற வெற்றிக்கு பின், கடந்த 2011, 2014-ம் ஆண்டுகளில் இன்னும் இந்திய அணி வெற்றி பெறவில்லை. ஆதலால், இந்த டெஸ்ட் தொடர் மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது.

பர்மிங்ஹாமில் தொடங்கியுள்ள இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்துள்ளது. இந்திய அணியில் யாரை பெஞ்சில் அமரவைப் போகிறார்கள், யார் விளையாடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற முறையில் களம் காண்கிறது.

கவுண்டி போட்டியிலும், பயிற்சிப் போட்டியிலும் மோசமாக விளையாடிய சட்டீஸ்வர் புஜாரா அமரவைக்கப்பட்டு, கே.எல்.ராகுல் அழைக்கப்பட்டுள்ளார். ஷிகார் தவண் அமர வைக்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனால், ஏனோ அவர் வாய்ப்பு பெற்றுள்ளார் எனத் தெரியவில்லை.

அதேபோல பந்து வீச்சில் இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சுக்கு அஸ்வின் மட்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்:

முரளி விஜய், ஷிகர் தவண், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திர அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, இசாந்த் சர்மா.

இங்கிலாந்து அணி விவரம்

அலிஸ்டார் குக், ஜென்னிங்ஸ், ஜோய் ரூட், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், ஆதில் ராஷித், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆன்டர்ஸன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x