Last Updated : 30 Jul, 2018 07:49 PM

 

Published : 30 Jul 2018 07:49 PM
Last Updated : 30 Jul 2018 07:49 PM

தோற்ற கோபத்தில் மீண்டெழுந்து பாகிஸ்தானை வீழ்த்தியது போல் கோலி படையைக் காலி செய்க: இங்கிலாந்துக்கு மைக்கேல் வான் முழக்க ஆலோசனை

கோபமாகச் செயல்பட்டு விராட் கோலிக்கு சவால் அளியுங்கள் என்று இங்கிலாந்து அணிக்கு முழக்க ஆலோசனை வழங்கியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வான்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ஜோ ரூட் தன் அணி வீரர்களிடம், நாம் நிரூபிக்க வேண்டியுள்ளது என்று சம்மட்டியடித்தது போல் கூறி, பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று பிறகு ஹெடிங்லீயில் கோபமாக மீண்டெழுந்து வெற்றி பெற்றது போல் விராட் கோலி அணிக்கு எதிராக இங்கிலாந்து கோபாவேசமாக ஆட வேண்டும். உங்கள் வீரர்களிடம் இப்படிக் கூறுங்கள்: ஹெடிங்லீயில் முதல் நாள் குறித்து என்ன நினைத்தீர்கள்?

சில வேளைகளில் அணி கூட்டத்தில் இப்படிச் செய்ய முடியாது. வீரர்களிடம் தனிப்பட்ட முறையில் இவ்வாறு உசுப்பேற்றி பேசலாம். ஒவ்வொரு வீரரிடம் போய், ‘லீட்ஸில் ஏன் இத்தனை தீவிரமுடன் இறங்கினீர்கள்?’ என்று கேட்க வேண்டும். உதை வாங்கி விட்டு விமர்சனங்களுக்கு பதில் கொடுப்பதை விடுத்து தொடக்கத்திலேயே இங்கிலாந்து இத்தகைய அணுகுமுறையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆதில் ரஷீத் விவகாரம் இதற்கு உதவும்.

இங்கிலாந்து ஒவ்வொரு போட்டியிலும் வெல்ல முடியாது, அந்த அளவுக்கு அணி நன்றாக இல்லை. ஆனால் மனநிலையில் இதே சிந்தனையை வைத்துக் கொள்ள முடியும்.

ஜோ ரூட் 16 டெஸ்ட்களில் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளார், ஆனால் அவர் அரைசதங்களை சதமாக மாற்றத் திணறுகிறார், அவர் இதனைச் செய்திருக்க வேண்டும். ஒருநாள் போட்டிகளில் பார்முக்கு வந்தார், ஆனால் வேறொருவர் போல் பேட் செய்ய முயல்கிறார், அவர் தன்னை நம்ப வேண்டும். இந்திய பவுலர்களை களைப்படையச் செய்ய வேண்டும்.

இது ஒரு கிரேட் சீரிஸ், பிட்ச்கள் அருமையாக இருக்கும். ஜோ ரூட் ஸ்பின் பந்துவீச்சை நன்றாக ஆடக்கூடியவர், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களைக் களைப்படையச் செய்ய வேண்டும், காரணம் அவர்கள் அவ்வளவு கட்டுக்கோப்பாக வீசக்கூடியவர்கள் கிடையாது.

அலிஸ்டர் குக் சீராக ஆட வேண்டும், ஒரு பெரிய ஸ்கோர் பிறகு குறைந்த ஸ்கோர்கள் வேலைக்கு ஆகாது

இங்கிலாந்து அணி 6 பவுலர்களுடன் இறங்கினால் அது அதிகம். என்னைப்பொறுத்தவரை பேட்டிங்கை வலுவாகவைத்துக் க்கொண்டு 5 சிறந்த பவுலர்களைத் தேர்வு செய்க. ரூட் 6வது பகுதி நேர வீச்சாளராக செயல்படட்டும்.

இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரச்சினை பெரிய ரன் எண்ணிக்கையான 400-550 என்று எடுப்பதில்லை.

பிராட், ஆண்டர்சன், கோலி:

கோலியின் முன் கால் நகர்த்தலுக்கு பிராட், ஆண்டர்சன் சவால் அளிக்க வேண்டும். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே தொடர்ந்து வீசி ஒரு பந்தை உள்ளே நேராகக் கொண்டு வந்து அவரை அக்ராஸாக ஆட வைத்து அவுட் ஆக்க வேண்டும்.

கோலியின் இடது கால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வர வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தன் ஆஃப்ஸ்டம்ப் எங்கிருக்கிறது என்ற சந்தேகம் அவருக்கு எழும் அப்போது ஆஃப் திசையில் ஸ்கொயராக ஆடும்போது எட்ஜ் வாய்ப்புகள் அதிகம். ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு அடி வெளியே செல்லும் பந்துகளுக்கு அவர் பலவீனம் தெரிகிறது. காற்றில் பந்துகள் மூவ் ஆனால் ஆண்டர்சன், பிராட் இருவரும் அபாயகரமானவர்கள்” என்றார் மைக்கேல் வான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x