Last Updated : 28 Jul, 2018 09:02 PM

 

Published : 28 Jul 2018 09:02 PM
Last Updated : 28 Jul 2018 09:02 PM

‘செய்தித்தாள்களையும், சமூகவலைதளங்களையும் பார்க்காதே’: ஸ்ரேயஸ் அய்யருக்கு தோனி அறிவுரை

 

நாளேடுகளைப் படிக்காதே, அனைத்து விதமான சமூக ஊடகங்களிலும்இருந்தும் ஒதுங்கி, கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்து என்று தோனி, எனக்கு அறிவு கூறினார் என்று ஸ்ரேயஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

ஜுன் சேனலில் வெளியாகும், ஓபன் ஹவுஸ் வித் ரெனில் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்ரேயஸ் அய்யர் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்தபின், தோனி எனக்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்கினார். அதில் குறிப்பாக என்னை செய்தித்தாள்களை படிக்காதே, சமூக ஊடகங்களில் இருந்து முடிந்தவரை ஒதுங்கி இரு என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் என்பது நம்முடைய வாழ்வில் மிக முக்கியமான பங்காக இருந்து வருகிறது. தோனியின் அறிவுரையை ஏற்று நான் கடைபிடித்து வருகிறேன்.ஆனால், நம்மை பற்றி வரும் விமர்சனங்கள்தான் நம்மை செம்மைப்படுத்தும். அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.

என்னுடைய ரசிகர்களிடம் இருந்து ஏராளமான அழைப்புகள், பாராட்டுக்கள், விமர்சனங்கள் வரும். அதை மிகவும் நுனுக்கமாகவே கையாள்வேன். அப்படித்தான் ஒரு பெண் எனக்கு பழக்கமானார்.

நான் ஐபிஎல் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தி தெரிந்தபின் அந்த பெண் எனக்கு தொடர்ந்து எனக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார். என்னை நேருக்கு நேர் சந்திக்க மிகவும் முயற்சித்தார். ஆனால், அவர் குறித்து அறிந்தபின், அந்த பெண் பணத்துக்காக இதுபோல் செய்தார் என்பதை அறிந்து கொண்டேன். இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.

2018-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் 14 இன்னிங்ஸில் விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 411 ரன்கள் குவித்தார். ஸ்ரேயாஸ் அய்யரின் ஸ்டிரைக் ரேட் 132 வைத்திருந்தார். தொடக்கத்தில் கம்பீர் தலைமையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி மோசமாக செயல்பட்ட நிலையில், அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமைக்கு மாறியபின் பல வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x