Published : 26 Jul 2018 07:12 PM
Last Updated : 26 Jul 2018 07:12 PM

டெஸ்ட் அணியில் அடில் ரஷீத் ‘முட்டாள்தனமான தேர்வு’- பாயும் முன்னாள் வீரர்கள்

சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் தனக்கு ஈடுபாடு இல்லை என்று யார்க்‌ஷயர் அணியுடன் குறைந்த ஓவர் கிரிக்கெட் ஒப்பந்தம் பெற்றவர் அடில் ரஷீத். இந்நிலையில் இந்தியா போன்ற ஸ்பின் ஸ்பெஷலிஸ்ட் பேட்டிங் வரிசைக்கு எதிராக அடில் ரஷீத்துக்கு திரும்பவும் வாய்ப்பளித்திருப்பது முட்டாள்தனமானது என்று இங்கிலாந்தில் எதிர்வினைகள் கிளம்பியுள்ளன.

மைக்கேல் வான்: 4 நாள் கிரிக்கெட் ஆடாதவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நாம் தேர்வு செய்துள்ளோம்!! அவர் சிறப்பாக ஆடுவாரா மாட்டாரா என்பதை விட்டுத்தள்ளுவோம், இந்த முடிவு முட்டாள்தனமானது, என்று கூற அதற்கு முன்னால் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டேரன் காஃப், ‘100% உண்மை’ என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

யார்க்‌ஷயர் கிளப் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஆர்தர்: இந்த சீசனில் சிகப்புப் பந்தில் கிரிக்கெட் ஆடாத ரஷீத்தைத் தேர்வு செய்தது எங்களுக்கு ஆச்சரியமே. அவரும் இதற்கு ஆர்வம் காட்டவில்லை. இங்கிலாந்துக்கு நாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்தால் சரி, என்று கூறியுள்ளார்.

அடில் ரஷீத், மொயின் அலியை தேர்வு செய்ததால் சோமர்செட் ஸ்பின்னர்களான ஜாக் லீச், டோமினிக் பெஸ் ஆகியோர் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதனையடுத்து சோமர்செட் கிரிக்கெட் தனது ட்விட்டரில், “வீ ஆர் சோமர்செட்” என்று அதிருப்தி பதிவு வெளியிட்டுள்ளது.

டேவிட் லாய்ட்: கடைசியில் அவர் சிகப்புப் பந்து கிரிக்கெட்டுக்குத் திரும்பியதை நான் சவுகரியமாகவே உணர்கிறேன்

முன்னாள் வீரர் ஜொனாதன் ஆக்னியு: “ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் அடில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார், ஆனால் இது யார்க்‌ஷயருக்கும் அடில் ரஷீத்துக்குமான பிரச்சினையே” என்று பதிவிட்டுள்ளார்.

ஹர்ஷா போக்ளே: இங்கிலாந்து ஸ்பின்னர்கள் அலமாரி எப்படி வெறுமையாகக் கிடக்கிறது என்பதையே ரஷீத் தேர்வு அறிவுறுத்துகிறது. மேலும் இங்கிலாந்தின் பிட்ச்கள் பற்றியும் எனக்கு இப்போது ஐயம் எழுகிறது. இங்கிலாந்து 2 ஸ்பின்னர்களுடன் ஆடினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஸ்கைல்ட் பெரி: இந்தியா டெஸ்ட் போட்டிகளில் ரஷீத் மீது வைத்திருக்கும் மனரீதியான பிடிமானம் பற்றி அறியாமல் தேர்வு செய்திருப்பது, கண்மண் தெரியாத முடிவே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x