Last Updated : 25 Jul, 2018 08:13 PM

 

Published : 25 Jul 2018 08:13 PM
Last Updated : 25 Jul 2018 08:13 PM

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசிய பவன் ஷா, முச்சதத்தைத் தவறவிட்டார்: இந்தியா யு-19 அணி 613 ரன்களுக்கு டிக்ளேர்

இளம் மகாராஷ்டிரா பேட்ஸ்மன் பவன் ஷா 282 ரன்கள் விளாசினார், இது யு-19 சர்வதேச போட்டிகளில் 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசி சாதனை புரிந்துள்ளார் பவன் ஷா. இலங்கை யு-19 அணிக்கு எதிராக இந்திய யு-19 அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 613 ரன்கள் குவித்துள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய யு-19 அணி ‘இளையோர் டெஸ்ட்’ தொடரில் ஆடி வருகிறது. இதில் ஹம்பண்டோட்டாவில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியின் 2ம் நாளில்தான் இளைய வீரர் பவன் ஷா 282 ரன்கள் குவித்தார், இந்தியா யு-19 613 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பவன் ஷாவின் 282 ரன்கள் 332 பந்துகளில் விளாசப்பட்டது இதில் 33 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் அடங்கும். முச்சதத்தை 18 ரன்களில் தவற விட்டார் பவன் ஷா.

1995ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் ஆஸி.யின் கிளிண்டன் பீக் 304 நாட் அவுட் சாதனையை பவன் ஷா முறியடிக்க முடியாமல் போனது.

இந்த இன்னிங்சின் முக்கிய அம்சம் இன்னிங்சின் 108வது ஓவரில் இலங்கை இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் விசித்ரா பெரேராவை தொடர்ச்சியாக 6 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார் பவன் ஷா.

சந்தீப் பாட்டீல் ஒருமுறை பாப் வில்லிசை 6 பவுண்டரிகள் விளாசினார், அதே போல் மே.இ.தீவுகளின் சர்வான், இந்தியாவின் முனாஃப் படேலை டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்தார், 2015 உலகக்கோப்பையில் இலங்கையின் திலக ரத்ன தில்ஷான், ஆஸி.இடது கை வேகப்பந்து புயலான மிட்செல் ஜான்சனை ஒரேஓவரில் 6 பவுண்டரிகள் விளாசினார்.

இந்த இன்னிங்ஸின் போது பவன் ஷா 2வது விக்கெட்டுக்காக இடது கை தொடக்க வீரர் அதர்வா டைடுடன் (177) இணைந்து 263 ரன்களை இருவரும் சேர்த்தனர். நிகில் வஹேராவுடன் இணைந்து 167 ரன்களைச் சேர்த்தார் பவன் ஷா.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 613/8 டிக்ளேருக்கு எதிராக இலங்கை முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மோஹித் ஜங்ரா 43/3.

“ஓவியா மாதிரி இப்போ யாருமே இல்ல...” - என்.எஸ்.கே.ரம்யா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x