Published : 25 Jul 2018 06:19 PM
Last Updated : 25 Jul 2018 06:19 PM

உங்கள் நாட்டில் பிட்ச் பற்றி நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம்; எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள்: ரவி சாஸ்திரி

நடப்பு இந்திய அணி பிட்ச்கள், தட்பவெப்பம் பற்றி புகார்களையும், சாக்குபோக்குகளையும் கூறும் அணியல்ல, அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

செம்ஸ்போர்டில் 3 நாள் பயிற்சி ஆட்டத்துக்கு முன்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

எனது கொள்கை எளிமையானது. உங்கள் நாட்டில் நாங்கள் பிட்ச் பற்றி கேள்விகள் கேட்கமாட்டோம், எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள் என்பதே.

இந்தத் தொடரில் ஒரு விஷயத்தை நான் உறுதி செய்ய முடியும். தட்பவெப்பம், சூழ்நிலை, பிட்ச் உள்ளிட்டவை மீது பழியைப் போட்டு சாக்குப் போக்குகள் கூறி புகார் தெரிவிக்க மாட்டோம். எங்கள் சவால் இங்கிலாந்தை வீழ்த்துவதே.

எங்கு சென்றாலும் நன்றாக ஆடுவதில் பெருமையடைபவர்கள் நாங்கல், அயல்நாடுகளில் சிறந்த அணி என்ற பெயர் எடுக்க ஆர்வமாக உள்ளோம். ஆகவே புகார், அழுகை ஆகியவற்றை வெளிப்ப்டுத்தும் அணியாக இந்திய அணி, இந்த இந்திய அணி ஒரு போதும் இருக்காது. எனவே இதனை நான் திரும்பத் திரும்ப உறுதியாகக் கூறுகிறேன்.

பிட்சில் நல்ல புற்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன, புற்களை வெட்ட வேண்டுமா என்று மைதானப் பராமரிப்பாளர் கேட்டார். வெட்டவே கூடாது என்று கூறிவிட்டேன், இது உங்கள் இஷ்டம், நீங்கள் கொடுக்கும் பிட்சில் நாங்கள் ஆடுகிறோம், அதுபோலவே எங்கள் நாட்டில் கொடுக்கும் பிட்சில் நீங்கள் ஆடுங்கள், கேள்வி கேட்காதீர்கள்

பயிற்சியாட்டம் 4 நாட்களிலிருந்து 3 நாட்களுக்குக் குறைக்கப்பட்டதற்கு தட்பவெப்பம் ஒரு காரணம், மேலும் டெஸ்ட் போட்டி நடக்கும் பர்மிங்ஹாமில் நாங்கள் 3 நாட்கள் பயிற்சி செய்ய முடிந்தது.

எனவே இங்கு 4 நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் ஆடியிருந்தால் டெஸ்ட் மைதானத்தில் நாங்கள் பயிற்சி செய்யும் வாய்ப்பில் ஒருநாளை இழந்திருப்போம். மேலும் பயிற்சி ஆட்டம் 2 அல்லது 3 அல்லது 4 நாளா என்பது பயணிக்கும் அணியின் சவுகரியத்தைப் பொறுத்ததே.

ஆகவே நேற்றுதான் பயிற்சி ஆட்டத்தை 3 நாட்களாகக் குறைக்க முடிவெடுத்தோம். எங்களுக்கு 2 நாள் பயிற்சி ஆட்டம் கூட போதும் காரணம் டெஸ்ட் மைதானத்தில் இன்னும் ஒருநாள் கூடுதலாகப் பயிற்சி செய்யலாம். ஆனால் எசெக்ஸ் அதிகாரிகள் டிக்கெட் விற்பனை போன்றவற்றைக் கூறினர், அதனால் சரி, 3 நாள் போட்டி ஆடுகிறோம் என்றோம்

சனியன்று பயணம் செய்து ஞாயிறன்று எட்ஜ்பாஸ்டனில் பயிற்சி செய்ய முடியும். இங்கு ஒருநாள் கூடுதலாக ஆடுவதில் பயனில்லை, டெஸ்ட் நடைபெறும் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வதுதான் அந்தச் சூழ்நிலைக்குப் பரிச்சயப்படுத்திக் கொள்ள முடியும் வேறொன்றுமில்லை.

இவ்வாறு கூறினார் ரவிசாஸ்திரி.

“ஓவியா மாதிரி இப்போ யாருமே இல்ல...” - என்.எஸ்.கே.ரம்யா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x