Published : 23 Jul 2018 09:05 PM
Last Updated : 23 Jul 2018 09:05 PM

‘அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு நோ, நோ’: இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி உத்தரவு

இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் வெல்ல வேண்டும் என்பதற்காகஇந்திய வீரர்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணி வீரர்கள் யாரும் மனைவியை உடன்வைத்துக்கொள்ளக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளதாக திமும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக்கைப்பற்றியது. ஆனால், மெத்தனமாக விளையாடியதால், ஒரு நாள் தொடரை 1-2 என்று இழந்தது. அடுத்துநடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க இருப்பதால், இடைப்பட்ட நாட்களை இந்திய வீரர்கள் தங்களின் மனைவி, குடும்பத்தாருடனும், காதலியுடனும்செலவிட்டு பொழுதைக் கழித்து வருகின்றனர்.

சமூகவலைதங்களில் அதுதொடர்பான புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், அடுத்துத்தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்மானத்துடன் பிசிசிஐ இருப்பதால், வீரர்கள் அனைவரும் மனைவியைவிட்டு ஒதுங்கி இருக்க உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள்தெரிவிக்கின்றன.

இது குறித்து அணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு 4 நாட்களுக்குமுன்பாகவே அனைத்து வீரர்களும் தங்களின் மனைவி, நண்பர்கள், உறவினர்களை விட்டு விலகிடவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அடுத்த 3 போட்டிகளுக்கு வீரர்கள் குடும்பத்தாரை விட்டு பிரிந்திருக்கவேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளது எனத் தெரிவித்தார்.

இந்திய வீரர்கள் ஒருநாள் தொடரில் மோசமாக விளையாடியதற்கும், பேட்டிங், பந்துவீச்சில் அதிகமாககவனம் செலுத்தாமல் போனதற்கு குடும்பத்தினரை அருகில் வைத்திருந்ததே காரணம் என்றுகுற்றம்சாட்டப்படுகிறது. இதனால், அடுத்துவரும் டெஸ்ட் போட்டியில் வெற்றி அவசியம் என்பதால், வீரர்களின் மனைவிகள், தோழிகள் ஆகியோருக்கு இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வரும் 25-ம்தேதி முதல் 28 வரை கெம்ஸ்போர்ட்யில் எஸெக்ஸ் அணியுடன்பயிற்சிப்போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x