Published : 23 Jul 2018 08:17 AM
Last Updated : 23 Jul 2018 08:17 AM

கிரிக்கெட்டின் உயர்தர ஹாட்ரிக்: இங்கிலாந்தின் ஜோர்டான் கிளார்க் சாதனை

ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் நடைபெறும் ரோஸஸ் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் லங்காஷயர் வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டான் கிளார்க் கிரிக்கெட் ஆட்டத்தின் உயர்தர ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதாவது டெஸ்ட் போட்டிகளில் சுமார் 14,639 ரன்களை தங்களிடையே பகிர்ந்து கொள்ளும் ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வரிசையாக வீழ்த்தினார் ஜோர்டான் கிளார்க்.

யார்க்‌ஷயர் அணிக்கு எதிராக ஜோர்டான் கிளார்க் நிகழ்த்தும் இந்த ஹாட்ரிக் சாதனையின் போது ஹாட்ரிக் ஓவரின் 2வது மற்றும் 3வது பந்துகளை ஜோ ரூட் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் ஜோ ரூட்டை வீழ்த்தினார். அடுத்த பந்தே வில்லியம்சன் எல்.பி முறையிலும் அடுத்ததாக ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்தும் வெளியேறினர்.

இதன் மூலம் ஜோர்டான் கிளார்க் தன் வாழ்நாளின் சிறந்த பந்து வீச்சாக 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

யார்க்‌ஷயர் அணி 59/1 என்ற நிலையிலிருந்து 59/4 என்று சரிந்து 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சர்வதேச கிரிக்கெட்டின் உயர்தர ஹாட்ரிக்குகள்:

ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ரா, இந்தியாவின் இர்பான் பத்தான் இரண்டு மறக்க முடியாத ஹாட்ரிக்குகளை டெஸ்ட் போட்டிகளில் எடுத்தனர். மே.இ.தீவுகளின் கேம்பெல், லாரா, ஜிம்மி ஆடம்ஸ் விக்கெட்டுகளை மெக்ரா வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்த, இர்பான் பத்தான், பாகிஸ்தானின் சல்மான் பட், யூனிஸ் கான், மொகமது யூசுப் ஆகிய அப்போதைய சிறந்த பாகிஸ்தான் பேட்ஸ்மென்களை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலியாவின் கிளிண்ட் மெக்காய் கார்டிப்பில் 2013ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் கெவின் பீட்டர்சன், ட்ராட், ரூட் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

ஆனால் பாகிஸ்தானின் ஆகிப் ஜாவேத் ஒருவேளை தன்னதுதான் சிறந்த ஹாட்ரிக் என்று கூறலாம் இவர் இந்தியாவின் ரவி சாஸ்திரி, அசாருதீன், சச்சின் ஆகியோரை ஷார்ஜாவில் ஒருநாள் போட்டியில் வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x