Published : 22 Jul 2018 10:04 AM
Last Updated : 22 Jul 2018 10:04 AM

புவனேஷ்வர் குமார் இல்லாதது வெற்றியை பாதிக்காது- சச்சின் டெண்டுல்கர் கருத்து

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புவனேஷ்வர் குமார், பும்ரா இல்லாதது இந்திய அணியின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்காது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

இங்கிலாந்துக்கு எதிரான குறுகிய வடிவிலான இரு தொடர்களில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டார். அவரது பந்துவீச்சுக்கு இங்கிலாந்து அணி மிரள்வது நன்றாகத் தெரிகிறது. ஆனால் அதேவேளையில் இங்கிலாந்து முன்னணி வீரரும், டெஸ்ட் அணியின் கேப்டனுமான ஜோ ரூட், குல்தீப் யாதவுக்கு எதிராக அபாரமாக விளையாடி வருகிறார். குல்தீப் யாதவ் எந்த வகையில் பந்தை கையில் இருந்து விடுவிக்கிறார் என்பதை கவனித்து ஜோ ரூட் விளையாடுகிறார். இதனால் அவரால் பந்தை எளிதில் கணித்து அடிக்க முடிகிறது.

ஆடுகளங்கள் தட்டையாகவும், வறண்டதாகவும் இருந்தால், டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியா வுக்கு நல்ல வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் ஆடுகளங்களில் புற்கள் காணப்பட்டால், அது இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாத கமாக அமைந்துவிடும். டெஸ்ட் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் புவனேஷ்வர் குமார் குமார், முதல் ஆட்டத்தில் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவுதான்.

புவனேஷ்வர் குமார் குமார், இங்கி லாந்து மைதானங்களில் நன்கு பந்துகளை கையாளத் தெரிந்தவர். அவர் இல்லாதது அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான். பல ஆண்டுகளாக அணிக்கு பங்களிப்பைக் கொடுத்து வரும் புவனேஸ்வரின் அனுபவம் முதல் 3 போட்டிகளில் இல்லாதது வருத்தமளிக்கிறது. அவர் ஸ்விங் செய்யும் பந்துகள், எதிரணிக்கு நிச்சயம் தலைவலியை ஏற்படுத் தும்.

இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர் குமார் குமார் ஆகியோர் இந்திய அணி யின் தரமான பந்து வீச்சாளர் கள். புவனேஷ்வர் குமார் இல்லாத போதும், இவர்கள் நால்வரும் தங்களது பங்களிப்பை சிறந்த முறையில் வழங்கவேண்டும்.

ஒருநாள் தொடரில் பும்ரா இல்லாதது அணிக்கு பின்னடை வாக அமைந்துவிட்டது. தற்போது முதல் டெஸ்டிலும் அவர் விளை யாடப் போவதில்லை. 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் விளை யாடும் போது அணிக்கு கூடுதல் பலமாக அமையும். ஆனால் முதல் டெஸ்டில் புவனேஷ்வர் குமார், பும்ரா இல்லாததால் அது இந்திய அணியின் வெற்றியைப் பாதிக்கும் என்ற கருத்து அணியினரிடையே நிலவுவதாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது.

1997-ல் எனது தலைமையில் டொரண்டோவில் சஹாரா கோப்பை போட்டிக்காக விளை யாடச் சென்றோம். அப்போது அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான நாத், வெங்க டேஷ் பிரசாத், சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே ஆகியோர் இடம்பெறவில்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான அந்தத் தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி கண்டோம். அந்தத் தொடரில் கங்குலி சிறப்பாக பந்து வீசி 4 ஆட்டங்களில் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாத தால் இந்திய அணி வெற்றி பெறாது என்று கூற முடியாது.

எதிர்மறையான நிலைகளிலும் தங்களால் முடிந்தவரைக்கும் சிறப்பான பங்களிப்பை வீரர்கள் வழங்கவேண்டும். இங்கிலாந்து தொடரில் விராட் கோலியின் பார்ம் எப்படி இருக்கும் என்று கூற முடியாது. அவரது பார்மை வைத்து தொடரை வெல்வோமா அல்லது தோல்வி அடைவோமோ என்றும் கூற முடியாது.

இந்தத் தொடரில் இந்திய அணியினர் அனைவருமே சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x