Published : 10 Jul 2018 03:38 PM
Last Updated : 10 Jul 2018 03:38 PM

‘கவாஸ்கருக்கு இன்று 69-வது பிறந்தநாள்: ‘முடிவெட்டிவிட்ட நடுவர்’, ‘ஸ்கோர் போர்டு பார்க்காதவர்’.. சுவையான சம்பவங்கள்

இந்திய கிரிக்கெட்டின் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படக்கூடிய சுனில் கவாஸ்கருக்கு இன்று 69-வது பிறந்தநாளாகும்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களை அடித்தவரும், 30 சதங்களுக்கு விளாசியவரும் என முக்கிய மைல்கல்லை எட்டியவர் சுனில் கவாஸ்கர். மிகவேகமாக ரன்களை குவிக்க அதிரடியாக ஆடுவதிலும் கெட்டிக்காரர், அதேசமயம், ஆமை வேகத்தில் பேட் செய்து, பந்துவீச்சாளர்களை சோர்வடையச் செய்வது எதிரணியை வெறுப்படையச் செய்வதிலும் வல்லவர் என பெயர் எடுத்தவர் கவாஸ்கர். இந்திய அணிக்கு கேப்டனாகவும் கவாஸ்கர் செயல்பட்டுள்ளார்.

உலகிலேயே தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் சுனில் கவாஸ்கர் குறிப்பிடத்தகுந்தவர். பந்துகளுக்கு ஏற்றார்போல், கால்களை நகர்த்தி பிரன்ட்புட், பேக்புட் , டிபென்ஸ் ப்ளே என அனைத்திலும் அவரின் பேட்டிங் நேர்த்தி பார்க்கவே அழகாக இருக்கும். கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகப்பந்துகளை அவர் சமாளித்து ஆடும் விதம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது.

125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கவாஸ்கர் 34 சதங்கள், 45 அரைசதங்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்து 122 ரன்கள் சேர்த்துள்ளார். 108 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள கவாஸ்கர் ஒரு சதம், 27 அரைசதம் உள்ளிட்ட 3 ஆயிரத்து 92 ரன்கள் சேர்த்துள்ளார்.

பல்வேறு பெருமைகளைக் கொண்ட சுனிஸ் கவாஸ்கருக்கு இன்று 69-வது பிறந்தநாளாகும். அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில சுவையான சம்வங்களைக் கூறலாம்.

மீனவக் குடும்பத்தில் வளர வேண்டிய கவாஸ்கர்?

Sunil-Gavaskar-jpg 

சுனில் கவாஸ்கர் “சன்னி டேஸ்” எனும் சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் ஒரு சுவையான சம்பவத்தை நினைவுபடுத்தியுள்ளார். சுனில் கவாஸ்கரை வளர்த்ததில் பெரும்பகுதி அவரின் மாமாவும், முன்னாள் கிரிக்கெட் வீரரான மாதவ் மந்திரியையும் சாரும். சுனிஸ் கவாஸ்கர் பிறந்திருந்தபோது, அவரின் காது மடலில் ஒரு மச்சம் இருந்ததை அவரின் மாமா மாதவ் மந்திரி கவனித்துள்ளார்.

கவாஸ்கர் தாய்க்கு பிரசவமான படுக்கைக்கு அருகே ஒரு மீனவப்பெண்ணுக்கும் பிரசவம் ஆனது. பிரசவம் முடிந்து சில மணி நேரங்கள் கழித்து செவிலியர் குழந்தையாக இருந்த கவாஸ்கரை தாயிடம் கொடுப்பதற்குப் பதிலாக, மீனவப் பெண்ணுக்கு பிறந்த குழந்தையை கொடுத்துவிட்டார். அவரும் வாங்கிக்கொண்டார். ஆனால், சிறிது நேரம் கழித்து அங்குவந்த கவாஸ்கரின் மாமா மாதவ் மந்திரி குழந்தையின் காதுப்பகுதியில் இருக்கும் மச்சத்தைப் பார்த்தபோது இல்லை. இதையடுத்து, செவிலியரை அழைத்து குழந்தை மாறிவிட்டது எனக்கூறி, அந்த மீனவப்பெண்ணிடம் இருந்த குழந்தையான கவாஸ்கரை பெற்றனர் என்று அந்த சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

ஒருவேளைக் குழந்தை மாறி இருந்தால், இன்று சுனிஸ் கவாஸ்கர் கடலில் மீன்டபிடித்துக்கொண்டிருப்பார். தலைசிறந்த பேட்ஸ்மேனையும், கிரிக்கெட் வீரரையும் இழந்திருப்போம்.

மைதானத்தில் முடிவெட்டிவிட்ட நடுவர்

suniljpg 

கடந்த 1974-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது. அப்போது கவாஸ்கர் பேட்டி செய்தபோது, அவரின் தலை முடிய நீளமாக வளர்ந்திருந்ததால், காற்றுக்கு முடி கண்களுக்கு முன்னால் விழுந்தது. இதனால் பந்தை சரியாகக் கணிக்க முடியாமல் இருந்தார்.

இதையடுத்து, அப்போது நடுவராக இருந்த டிக்கி பேர்டிடம் இதைத் தெரிவித்ததும், பெவிலியினிலிருந்து கத்தரிக்கோலை வரவழைத்து, கவாஸ்கருக்கு முடிவெட்டிவிட்டார் நடுவர் டிக்கிபேர்ட். இந்த டெஸ்ட்போட்டியில் கவாஸ்கர் 101 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

174 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்த பொறுமைசாலி

எதிரணியை வெறுப்பேற்றும் அளவுக்கு ஆமை வேகத்தில் பேட்டிங் செய்வதில் கவாஸ்கர் வல்லவர். 1975-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியில் கவாஸ்கர் 174 பந்துகளைச் சந்தித்து வெறும் 36 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இந்தப் போட்டியில் கவாஸ்கரின் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 20.68தான்.. 202 ரன்களளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் கவாஸ்கருக்கு நிறைய கெட்டபெயரைச் சம்பாதித்துக்கொடுத்தது.

ஸ்கோர்போர்டு பார்க்காத வீரர்

சுனிஸ் கவாஸ்கர் பேட்டிங் செய்யும் போது, மைதானத்தில் இருக்கும் ஸ்கோர்போர்டை பார்த்து பேட்டிங் செய்யும் பழக்கம் இல்லாதவர். மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது. அந்த போட்டியில் கவாஸ்கர் 94 பந்துகளில் சதமெடுத்தார்.  கிரிக்கெட்டில் டான் பிராட்மேனின் 29-வது சதத்தை சுனிஸ் கவாஸ்கர் அந்தப் போட்டியில் எட்டிவிட்டார். ஆனால், அது தெரியாமல் கவாஸ்கர் விளையாடிக்கொண்டிருந்தார். மறுமுனையில் இருந்த வெங்சர்க்கர், கவாஸ்கர் நீங்கள் 29-வது சதம் அடித்துவிட்டீர்கள் என்று மகிழ்ச்சியுடன் கட்டித்தழுவியபோதுதான் கவாஸ்கருக்கே தெரியும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x