Published : 10 Jul 2018 03:02 PM
Last Updated : 10 Jul 2018 03:02 PM

குரேஷிய ”நட்சத்திரன்” லுகா மோட்ரிச் கால்களுக்கு இடையே பந்தைச் செலுத்துவேன்: இங்கிலாந்தின் டெலி ஆலி திட்டவட்டம்

உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் அதன் பரபரப்பான இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது, இதில் இன்று பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் இன்று மோதுகின்றன. புதனன்று இங்கிலாந்து, குரேஷியா அணிகள் மோதுகின்றன.

குரேஷியாவின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லுகா மோட்ரிச். இவரது கால்களுக்கு இடையில் பந்தைத் தள்ளி எடுத்துச் செல்வேன் என்கிறார் இங்கிலாந்தின் டெலி ஆலி.

கால்பந்தாட்டத்தில் ஒரு வீரரின் கால்களுக்கு இடையே அடித்துப் பந்தை எடுத்துச் செல்வது கால்கள் வழியே பந்தை விடு வீரருகு இழிவான ஒரு தருணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மெஸ்ஸி கால்கள் வழியாகப் பந்தை எடுத்துச் செல்வேன் என்றோ நெய்மர் கால்கள் இடுக்கில் பந்தை அடித்து எடுத்து செல்வேன் என்றோ அவ்வளவு சுலபமாக யாரும் கூறிவிட முடியாது, பிறகுதானே அவ்வாறு செய்வதற்கு?

ஆனால் கிட்டத்தட்ட குரேஷியாவின் ஒரு கிரேட் என்று பார்க்கப்படும் லுகா மோட்ரிச் கால்களுக்கு இடையில் பந்தை அடிப்பேன் என்று இங்கிலாந்து வீரர் டெலி ஆலி கூறியிருப்பது அவமரியாதையா அல்லது போட்டிக்கு முன்பாக அவரைச் சிறிது உசுப்பேற்றும் கூற்றா என்று தெரியவில்லை. மேலும் குரேஷியாவுக்கு எதிராக எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்ட போது பதற்றமா? எனக்கா? உற்சாகமாகவே அவர்களை எதிர்கொள்வேன் என்கிறார் டெலி ஆலி.

“தடுப்பாட்ட ரீதியாக ஸ்வீடனுக்கு எதிராகச் சரியாகச் செய்தேன். ஆனால் இன்னும் கொஞ்சம் பந்துடன் நான் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். வாய்ப்புகளை உருவாக்கும் அச்சுறுத்தல் வீரராகவே விரும்புகிறேன். நான் நன்றாக நகர்கிறேன் என்று தெரிகிறது, ஆனால் ஆட்டத்தில் கூர்மையில்லை. நான் பந்தை என் தரப்பில் நான் விரும்பும் அளவுக்கு வைத்துக் கொள்வதில்லையோ என்று தோன்றுகிறது. கோல் அடிப்பது நம்மைத் தூக்கி விடும். ஆனால் எனது மிகப்பெரிய விமர்சகனே நான் தான். இன்னும் சிறப்பாக ஆட முடியும் என்பதே என் விமர்சனம்.

எனது பிரார்த்தனை எளியதே, நான் கோல் அடித்தால் இங்கிலாந்து வெல்லும், அதைத்தான் மோட்ரிச்சுக்கு எதிராக முயற்சி செய்யப்போகிறேன். அவர் கால்களுக்கு இடையே பந்தைத் தட்டி விடுவது நடக்குமா, நடக்கும் என்றே நினைக்கிறேன். அதற்காக நான் கவனம் செலுத்தப்போவதில்லை, ஆனால் அப்படி நடந்தால் நன்றாக இருக்கும்” என்கிறார் டெலி ஆலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x