Published : 29 Jun 2018 03:29 PM
Last Updated : 29 Jun 2018 03:29 PM

நடுவர்கள் தீர்ப்பா அளித்தார்கள்? முற்றிலும் அநீதி: மொராக்கோ கால்பந்து அணி கடுமையான புகார்

மொராக்கோ ராயல் கால்பந்து கூட்டமைப்பு உலகக்கோப்பை 2018-ல் தங்களுக்கு இழைக்கப்பட்ட நடுவர் தீர்ப்பு அநீதிகள் குறித்து உலகக்கால்பந்து கூட்டமைப்பிடம் புகார் அளித்துள்ளது.

மொராக்கோ கால்பந்துக் கூட்டமைப்புத் தலைவர் ஃபவுஸி லெக்யா, நடுவர்களின் அநீதியான பிழைகள்தான் தங்கள் அணி ரஷ்யாவிலிருந்து முதல் சுற்றுடன் நாடு திரும்ப நேரிட்டது. வீடியோ ரெஃபரல் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் நடுவர்கள் தீர்ப்பு எதிரணிக்கே சாதகமாக அமைந்தது என்று கடும் புகார் எழுப்பியுள்ளனர்.

பிரிவு பி-யில் ஈரான், போர்ச்சுகள், ஸ்பெயின் அணிகளுடன் மொராக்கோ விளையாடியது. இதில் ஈரான் அணிக்கு எதிராக கடைசியில் துரதிர்ஷடவசமாக மொராக்கோ வீரர் தங்கள் கோலுக்குள்ளேயே அடிக்க முதல் தோல்வி ஏற்பட்டது, ஆனால் போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய அணிகளுக்கு எதிராக கடும் சவால் அளித்தது மொராக்கோ.

“எங்கள் நாட்டு அணி, நடுவர்கள் தீர்ப்பினால் பெற்ற அநீதிகளையும், எரிச்சலையும் வெளிப்படுத்த விரும்புகிறோம். நடுவர்கள் பிழையினால் எங்கள் அணி 2018 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறியது.

இந்த நடுவர் தீர்ப்பு பிழைகளின் கடுமை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது, போர்ச்சுக்கல், ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக வீடியோ ரெஃப்ரல் எதிரணியினருக்குச் சாதகமாகவே பயன்படுத்தப்பட்டது” என்று கூறி தவறுகளை பட்டியலிட்டுள்ளது.

போர்ச்சுக்கலுக்கு எதிராக 0-1 என்று தோல்வி தழுவிய மொராக்கோ ஸ்பெயினுக்கு எதிராக 2-2 என்று ட்ரா செய்தது.

என்ன நடந்ததோ அது எங்களின் பொறுப்பான கவலைகளை அதிகரித்துள்ளது, மேலும் இத்தகைய அநீதிகள் தொடர்ந்தால் ஃபிபா மீதான எதிர்மறை விளைவுகளையே அது ஏற்படுத்தும், கால்பந்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும்.

ஆகவே தலைவர் கியானி இன்ஃபாண்டினோ இது குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உலகக்கோப்பைகளில் நீதியுடன் நடுவர்கள் செயல்படுவதை உறுதி செய்து அநீதிகள் சரி செய்யப்பட்டு சம வாய்ப்புகள் உள்ளவாறு தொடர்கள் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கடிதத்தில் தெரிவித்தார்.

போர்ச்சுக்கலுக்கு எதிராக பெனால்டி கிக் கொடுக்காதது:

26வது நிமிடத்தில் அம்ராபட் ஒரு லாங் பாஸை எடுத்து ராஃபேல் கிரைரோவைத் தாண்டி எடுத்துச் சென்று போர்ச்சுகல் பாக்சிற்குள் சென்றார், ஆனால் கிரைரோ அவருக்குக் கடும் நெருக்கடி கொடுக்க கீழே விழுந்தார், மொராக்கோ அணி பெனால்டி கிக் எதிர்பார்த்தது, மீண்டுமொரு தருணம் வீடியோ ரெஃபரலைப் பயன்படுத்தாமல் ஆட்டம் கடந்து சென்றது.

ரீப்ளேயில் போர்ச்சுகல் வீரர் கிரைரோ, மொராக்கோவின் அம்ராபட்டின் சட்டையைப் பிடித்து கடுமையாக இழுத்தது தெரிந்தது. ஆனால் அம்ராபட்டும் கிரைரோவின் கால்சட்டையைப் பற்றியதும் தெரிந்தது. இது கொடுக்கப்பட்டிருந்தால் உலகக்கோப்பையின் கதியே மாறியிருக்கும்.

ஸ்பெயினுக்கு எதிரான நடுவர் தீர்ப்புப் பிழைகள்:

மொராக்கோ 14ம் நிமிடத்தில் காலித் பூட்டைப் மூலம் முதல் கோலை அடிக்க ஸ்பெயின் அணி அலார்கன் இஸ்கோ மூலம் 19வது நிமிடத்தில் சமன் செய்தது, ஆனால் ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் யூசெஃப் என் நெஸிரி எதிர்பாராதவிதமாக ஒரு கோலை அடிக்க மொராக்கோ 2-1 என்று முன்னிலை பெற்றது.

92வது நிமிடத்தில் 1-2 என்று பின் தங்கிய நிலையில் ஸ்பெயின் வீரர் இயாகோ ஆஸ்பாஸ் ஒரு கோலை அடிக்க, ஆட்டம் முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில் நடுவர் ஆஃப் சைடு, கோல் இல்லை என்று தீர்ப்பளித்தார். ஸ்பெயினின் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வர ஸ்டேடியமே திக் திக் என்று வீடியோ நடுவரின் முடிவு என்னவாக இருக்கும் என்று கைகளைத் தேய்த்தபடி, நகங்களை கடித்தபடி காத்திருந்தன. வீடியோ நடுவர் ஆஃப்சைடு இல்லை என்று தீர்ப்பளிக்க ஸ்பெயினின் கடைசி நிமிட கோல் 2-2 என்று மொராக்கோவுடன் ஒரு ட்ராவை ஏற்படுத்தியது, இதே இந்த கடைசி நிமிட வீடியோ ரெஃபரலால் ட்ரா ஆனதையடுத்து கடுப்பான மொராக்கோவின் நார்டின் அம்ராபட், “வீடியோ ரெஃபரல் ஒரு புல்ஷிட்” என்று திட்டினார்.

இந்த ஆட்டத்தில் நிறைய முறை நடுவர் தீர்ப்புகள் ஸ்பெயினுக்குச் சாதகமாக இருந்ததை பிற கால்பந்தாட்ட ஊடகங்களும் சுட்டிக்காட்டின.

இந்நிலையில் மொராக்கோ அதிகாரபூர்வ புகார் அளித்துள்ளது. ஒரு நல்ல அணி அநீதியான தீர்ப்புகளினால் வெளியேறியது கால்பந்தாட்டத்துக்கு பேரிழப்புதான்.

மொராக்கோ அணிக்கு நடந்ததென்ன? : கீழ் லிங்குகளை கிளிக் செய்யுங்கள்:

ரொனால்டோவின் அபாரமான 4-ம் நிமிட கோலினால் போர்ச்சுகல் வெற்றி: அருமையாக ஆடிய மொராக்கோ வெளியேற்றம் -  அன்று நடந்தது என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x