Last Updated : 23 Jun, 2018 03:57 PM

 

Published : 23 Jun 2018 03:57 PM
Last Updated : 23 Jun 2018 03:57 PM

நாங்கள் எதைச் சொன்னாலும் உலகம் அதை நம்பாது: அர்ஜெண்டீனா கோல் கீப்பர் கவாலேரோ விரக்தி

ஐஸ்லாந்துடன் ட்ரா ஆனதற்கும் குரேஷியாவுக்கு எதிராக 0-3 என்று படுதோல்வையடைந்ததற்கும் அர்ஜெண்டினா அணியின் பிரதான காரணமாக கோல் கீப்பர் கவாலேரோவின் அபத்த கோல் கீப்பிங் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

ஆனால் ஐஸ்லாந்துக்கு எதிராக மெஸ்ஸி சொதப்பிய பெனால்டி கிக்கும், குரேஷியாவுக்கு எதிராக எங்கிருந்தார் என்றே தெரியாமல் ஆடியதும் அர்ஜெண்டினா அணி தற்போது வெளியேறும் அபாயத்தில் உள்ளது.

ஆனால் குரேஷியாவுக்கு எதிராக பந்தை அடித்து விரட்டாமல், அல்லது பிடித்து கோல் கிக் செய்யாமல் குரேஷிய வீரர் வெகு அருகில் இருக்கும் போதே சொத்தையாக பாஸ் செய்கிறேன் பேர்வழி என்று கோட்டைவிட குரேஷியா கோல் முதல் கோலை அடித்தது, அதன் பிறகு குரேஷியா திரும்பிப் பார்க்கவில்லை.

ஐஸ்லாந்துக்கு எதிராகவும் டைவ் அடித்துப் பந்தப் பிடிக்கும் முயற்சியில் பந்து ஐஸ்லாந்து வீரரிடமே வர கோல் ஆனது.

இந்த இரண்டுமே தவறுகள் என்று விமர்சனம் எழுந்தையடுத்து அவர் ஸ்பானிய மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியில் விரக்தியாகப் பேசியுள்ளார்:

நான் என் பணியில் கவனம் செலுத்த விரும்புகிறேன் பலிகடா ஆக விரும்பவில்லை, நன்றாக ஆடி வெற்றி பெற்ற பிறகு மன்னிப்பு கேட்க வேண்டும், வெறும் வார்த்தையால் என்ன பயன்?

கோல் கீப்பிங் மற்றும் அணியின் ஆட்டம் குறித்து மிகவும் மோசமான குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, மிகவும் கடினமான காலக்கட்டமாகும் இது. இதனைக் கடக்க வேண்டும்.

நான் நிறைய விஷயங்களைப் பேச விரும்புகிறேன், ஆனால் பேசுவதற்கு இது தோதான நேரம் அல்ல, வெற்றி பெற்றுவிட்டுத்தான் பேச வேண்டும். இப்போது கடினமாக உழைத்து வெற்றி பெறவேண்டும் அவ்வளவே, பேசுவதோ அறிக்கைகளோ விட்டு பலிகடாவாக விரும்பவில்லை.

ஒரு ட்ரா, ஒரு தோல்விக்குப் பிறகு அர்ஜெண்டினா வீரர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள், ஆனால் அதுகுறித்து எதைக் கூறினாலும் உலகம் அதை நம்பப் போவதில்லை.

இவ்வாறு கூறினார் கவலேரோ விரக்தியுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x