Published : 23 Jun 2018 11:45 AM
Last Updated : 23 Jun 2018 11:45 AM

யார் சிறந்த விக்கெட் கீப்பர்? - தோனியைக் கூறுவார் என்று நினைத்தபோது ஆடம் கில்கிறிஸ்ட் விநோதம்

குறுகிய வடிவ கிரிக்கெட்டில் இந்தியாவின் மகேந்திர சிங் தோனிதான் இப்போது சிறந்த விக்கெட் கீப்பர். இன்னமும் கூட அவரிடம் பிளாஷ் ஸ்டம்பிங் உள்ளது, விக்கெட் கீப்பிங் பேடுடனேயே நீண்ட தூரம் சென்று பந்தை பீல்ட் செய்யும் வேகமும் உள்ளது.

ஆனால் ஆடம் கில்கிறிஸ்ட் இன்று யார் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற கேள்விக்கு நினைத்துப் பார்க்க முடியாத ஒரு பெயரைக் கூறினார்.

டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலில் விக்கெட் கீப்பிங் பற்றிய கேள்வி கில்கிறிஸ்டிடம் கேட்கப்பட்டது, அப்போது இங்கிலாந்து மகளிர், தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஒருநாள் போட்டியில் ஆடிக்கொண்டிருந்தது. அப்போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாரா டெய்லரின் அபூர்வ விக்கெட் கீப்பிங் திறமைகளை விதந்தோதினார் கில்கிறிஸ்ட்.

சாரா டெய்லர் விக்கெட் கீப்பிங்கை உலத்தரம் வாய்ந்தது என்றார். சாரா டெய்லரும் மிகக் கடினமான லெக்திசை ஸ்டம்பிங் ஒன்றை நிகழ்த்தினார். தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி கேப்டன் டேன் வான் நீகெர்க்கை அவ்வாறு வியத்தகு திறமையில் வெளியேற்றினார் சாரா டெய்லர். ஆஷஸ் தொடரிலும் இத்தகைய லெக் திசை ஃபிளாஷ் ஸ்டம்பிங்கை அவர் செய்துள்ளார்.

இது குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறிய போது, “சிறிது நாளைக்கு முன்பு நான் ட்வீட் செய்திருந்தேன். சாரா டெய்லர்தான் இப்போது உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் ஆண் விக்கெட் கீப்பரகா இருந்தாலும் பெண் விக்கெட் கீப்பராக இருந்தாலும் சாரா டெய்லர்தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர்.

நான் கொஞ்சம் தைரியமாகவே இதனைக் கூறுகிறேன். ஏனெனில் நிறைய அருமையான விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். அலைசா ஹீலி என்ற மற்றொரு மகளிர் விக்கெட் கீப்பர். லெக் திசை ஸ்ட்ம்பிங்கைச் செய்வதில் தனித்திறமை மிக்கவர்.

ஸ்டம்புக்கு அருகில் இருந்து அவர்கள் கீப் செய்து அதிகம் உழைக்கிறார்கள். கடந்த சில காலங்களாக நான் பார்த்து வருகிறேன், சாரா டெய்லரும், அலைசா ஹீலியும் உண்மையில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x