Published : 10 Jun 2018 09:22 AM
Last Updated : 10 Jun 2018 09:22 AM

செய்தித்துளிகள்: வெற்றியை கணிக்கும் காது கேட்காத பூனை

ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து ஆட்டங்களின்போது எந்த அணி வெற்றி பெறும் என்பதை இந்த முறை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலுள்ள அச்சில்ஸ் என்ற காது கேட்காத பூனை கணிக்கவுள்ளது. பூனையிடம் இரு நாட்டு அணிகள் உள்ள கிண்ணங்கள் தரப்படும். எந்தக் கிண்ணத்தை பூனை தேர்வு செய்கிறதோ அந்த அணி வெற்றி பெறுமாம்.

பியூனஸ் அயர்ஸ் நகரில் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் பிரிவில் விளையாட இந்திய வீராங்கனை அர்ச்சனா காமத் தகுதி பெற்றுள்ளார். மலேசியாவில் நடைபெற்று வரும் போட்டியில் அர்ச்சனா காமத் 11-5, 9-11, 11-8, 11-9, 11-8 என்ற கணக்கில் மலேசியாவின் சாங் அலைஸ் லி சியானை வென்றதன் மூலம் இளையோர் ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்றுள்ளார்.

மேற்கு இந்தியத் தீவின் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 414 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x