Published : 02 Jun 2018 07:53 AM
Last Updated : 02 Jun 2018 07:53 AM

4-வது சுற்றில் ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் செர்பியாவின் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 20-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 6-4, 6-7 (6-8), 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் 13-ம் நிலை வீரரான ஸ்பெயினின் பவுதிஸ்டா அகுட்டை வீழ்த்தினார். 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெச்சாண்டர் ஜிவெரேவ் 6-3, 3-6, 4-6, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் 54 நிமிடங்கள் போராடி 26-ம் நிலை வீரரான போஸ்னியாவின் தமீர் ஸும்கூரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 4-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 3-6, 5-7 என்ற நேர் செட்டில் 31-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் மைஹேலா புஸர்நெஸ்குவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 2-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-0, 6-3 என்ற நேர் செட்டில் பிரான்சின் பவுலின் பர்மெண்டியரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x