Published : 01 Jun 2018 09:35 AM
Last Updated : 01 Jun 2018 09:35 AM

செய்தித்துளிகள்: ரஷ்ய அணி தோல்வி

* ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஷினேடின் ஷிடேன் விலகி உள்ளார். இவரது தலைமையில் ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக 3 முறை சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்தத் தொடரை நடத்தும் ரஷ்ய அணி, நட்புரீதியலான ஆட்டத்தில் ஆஸ்திரியாவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

* புரோ கபடி லீக் தொடரின் வீரர்கள் ஏலத்தில் 2-வது நாளான நேற்று ரைடரான பிரஷாந்த் குமார் ராயை ரூ.79 லட்சத்துக்கு யுபி யோதாஸ் அணி ஏலம் எடுத்தது. மற்றொரு ரைடரான சந்திரன் ரஞ்ஜித்தை ரூ.61.25 லட்சத்துக்கு தபாங் டெல்லி அணி வளைத்து போட்டது.

* கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான சஞ்ஜிதா சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கி உள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

* நெதர்லாந்தில் வரும் 23-ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு கோல்கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டனான சர்தார் சிங்குக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x