Published : 01 Jun 2018 07:56 AM
Last Updated : 01 Jun 2018 07:56 AM

கொலம்பிய வீரரின் உயிரைக் குடித்த ஓன் கோல்

15-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. அர்ஜென்டினாவின் நட்சத்திர நாயகன் டிகோ மரடோனாவின் கால்பந்து வாழ்க்கை இந்த உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் தொடரின் பாதியிலேயே மரடோனா வெளியேற்றப்பட்டார். இந்தத் தொடரில் அர்ஜென்டினா நாக் அவுட் சுற்றில் ருமேனியாவிடம் தோல்வியடைந்தது.

இந்த உலகக் கோப்பையில் கொலம்பியா அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த அணி லீக் சுற்றை கூட தாண்ட முடியவில்லை. அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொலம்பியா வீரர் ஆன்ட்ரஸ் எஸ்கோபர் ஓன் கோல் அடித்தார். இந்த ஆட்டத்தில் கொலம்பியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அந்த அணி லீக் சுற்றுடன் மூட்டை கட்டியதற்கு இந்த தோல்வி முக்கிய காரணமாக அமைந்தது. இந்த ஆட்டம் முடிவடைந்த 10 நாட்களில் ஆன்ட்ரஸ் எஸ்கோபர், கொலம்பியாவின் மெட்லின் புறநகரில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த உலகக் கோப்பையின் இறுதியாட்டத்தில் பிரேசிலும், இத்தாலியும் மோதின. போட்டி நேரத்தில் கோல் எதுவும் அடிக்கப்படாத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் கோல் கிடைக்காததைத் தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் பிரேசில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியைத் தோற்கடித்தது. இதன் மூலம் 4-வது முறையாக பட்டம் வென்று சாதனை படைத்தது பிரேசில். பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட முதல் உலகக் கோப்பை இறுதிப்போட்டியாக இது அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x