Last Updated : 04 May, 2018 06:59 PM

 

Published : 04 May 2018 06:59 PM
Last Updated : 04 May 2018 06:59 PM

ஐபிஎல்-க்குப் பிறகு என்ன? இந்திய அணியில் தன் நிலை என்ன?: யோசிப்பதில்லை என்கிறார் கே.எல்.ராகுல்

கிறிஸ் கெய்லுடன் களமிறங்கினால் அவர் மீதே எதிரணியினரின் கவனம் இருக்கும், இதனால் நான் என் பாணியில் ரன்களை நெருக்கடிக்கு ஆளாகாமல் அடிக்க முடிகிறது என்று கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தற்போதைய ‘ஸ்டைலிஷ்’ பேட்ஸ்மென் என்று கருதப்படும் ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரில் 268 ரன்களை சேர்த்துள்ளார், ஸ்ட்ரைக் ரேட் அபாரமான 170.70 ஆகும்.

அவர் கூறியதாவது:

டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல், அவருடன் இறங்குவது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. அவரால் எனக்கு வாழ்வு எளிதாக இருக்கிறது.

எதிரணி வீச்சாளர்கள் அவர் மீதே கவனம் குவிப்பது எனக்குச் சாதகமாக அமைகிறது, என் அழுத்தத்தை கெய்ல் எடுத்து விடுகிறார் இதனால் நான் மகிழ்ச்சியுடன் ஆடுகிறேன்.

கெய்லுடன் ஆர்சிபிக்காகவும் ஆடியுள்ளேன், அவர் மிகச்சிறந்த மனிதர், அவர் எப்பவும் முகத்தில் புன்னகை தவழ கிரீசில் இருப்பார், நெருக்கடி தருணங்களில் கூட ரசிகர்களின் ஜனரஞ்சகத்திற்காக ஆடக்கூடியவர். எதிரணியினர் எப்போதும் கெய்லைக் கண்டால் அழுத்தமடைகின்றனர்.

இப்போதைக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம். பின்னால் என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி எனக்கு கவலையில்லை. ஒவ்வொரு தொடரிலும் வீரராக என் ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறேன். நான் உண்மையில் ஐபிஎல் கிரிக்கெட்டுக்குப் பிறகு என்ன? அல்லது இந்திய அணியில் என் நிலை என்ன? என்பது பற்றியெல்லாம் யோசிப்பதேயில்லை.

என் கிரிக்கெட்டை மகிழ்வுடன் ஆடி வருகிறேன். வாய்ப்புகள் என் வழியில் வரும் என்பது எனக்குத் தெரியும். நான் பொறுமையாக இருக்க வேண்டும் தொடர்ந்து ரன்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

விக்கெட் கீப்பிங்:

குறுகிய வடிவங்களில் விக்கெட் கீப்பிங் செய்வது பிடித்திருக்கிறது. முதலில் நாங்கள் பவுலிங் செய்யும் போது பிட்ச் எப்படி உள்ளது என்பதை என்னால் கணிக்க முடிகிறது. இதனால் என் பேட்டிங்கை திட்டமிட முடிகிறது, இதுவரை நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது

அஸ்வின் ‘பிரில்லியண்ட்’

ஐபிஎல் தொடங்கிய போதும், முகாம்கள் நடைபெறும் போதும் அஸ்வின் செயலூக்கமிக்கவராக இருந்து வருகிறார். அவரது கேப்டன்சி இதுவரை பிரில்லியண்ட் ரகம். இளம் வீரர்களுக்கு உதவுவதில் அவர் சிறப்பாகத் திகழ்கிறார், 7 ஆட்டங்களில் 5 வெற்றி, இதற்கான பெருமை அவருக்குச் சேர வேண்டும்.

சேவாக் இளம் வீரர்களுக்கும் உதவிகரமாக உள்ளார், அயல்நாட்டு வீரர்கள் கூட சேவாகிடம் ஆலோசனை பெறுகின்றனர். இந்தியாவுக்காக அவர் அதிரடி இன்னிங்ஸ்களை ஆடிஉள்ளதால் அவரிடமிருந்து ஆலோசனை பெற காத்திருக்கின்றனர். நிறைய சுதந்திரம், ஓயவறை கேளிக்கை இதுதான் இங்குள்ள சூழல்.

இவ்வாறு கூறினார் ராகுல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x