Last Updated : 04 May, 2018 03:37 PM

 

Published : 04 May 2018 03:37 PM
Last Updated : 04 May 2018 03:37 PM

தோல்வி முகத்தில் விழுந்த அறைதான்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்

கொல்கத்தாவுக்கு எதிராக தோற்ற விதம் குறித்து கடுமையாகப் பேசிய ஸ்டீபன் பிளெமிங் இதற்காக அணியில் பெரிய மாற்றங்கள் தேவை என்ற கருத்தை நிராகரித்தார். மோசமான பீல்டிங் சென்னைக்கு நேற்று பின்னடைவைக் கொடுத்தது.

இளம் வேகப்பந்து வீச்சாளர் கே.எம்.ஆசிப்பின் இருதயம் நொறுங்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா அடுத்தடுத்து கேட்ச்களை அதிரடி வீரர் சுனில் நரைனுக்கு விட்டார்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து பிளெமிங் கூறியதாவது:

நாங்கள் அம்பலமானோம், மேலும் சிலவேளைகளில் எங்கள் பவுலிங்கில் இது வெளிப்பட்டுவிடுகிறது. நல்ல பீல்டர்களே தவறுகள் இழைக்கும் போது நிச்சயன் நாங்கள் ஓர் அடி பின் வாங்கவே செய்கிறோம். அது கொஞ்சம் அடிகொடுக்கவே செய்கிறது.

நீண்ட தொடரில் இவ்வாறு நடப்பது சகஜம்தான், எந்த ஒரு விதத்திலும் இது நல்ல ஆட்டம் என்று கூறமாட்டேன், சரிசெய்ய மணிநேரங்களே உள்ளன, நாட்கள் இல்லை, தோல்வி என்பது நம் முகத்தில் விழும் அறைதான், இது பாதிக்காது என்றே நம்புகிறேன், இன்னும் கடின உழைப்பு இருக்கிறது.

ஒரு மோசமான ஆட்டத்தையடுத்து மிகவும் தன்னம்பிக்கையற்ற நிலைக்குச் சென்று விடக்கூடாது. ஒரு ஆட்டம் தோல்வி என்றவுடன் நீக்குவதும், மாற்றம் செய்வதும் சுலபம். இதே பவுலர்கள்தான் கடந்த போட்டியில் வெற்றி பெறச் செய்தர். எனவே நாம் எச்சரிக்கையுடன் தான் அணுக வேண்டும், ஒருவரின் நல்ல பார்ம் வெளிவருவதற்கான நீண்ட தொடர்தான் இது.

178 ரன்கள் என்ற இலக்கு எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியற்ற இலக்காகத் தெரியவில்லை, சற்றே சவாலான இலக்குதான். நாங்கள் சரியாகத் தொடங்கவில்லை, வாய்ப்புகளைக் கோட்டை விட்டோம்.

கொஞ்சம் தீவிரத்தை இழந்து விட்டோம், கடைசி 4-5 ஓவர்களில் இன்னும் கொஞ்சம் அதிகமாக ரன்களைச் சேர்க்க முயற்சிக்க வேண்டும். ஜடேஜா இன்னும் கொஞ்சம் பங்களிப்பு செய்ய வேண்டும். பந்துக்கு ஒரு ரன் என்பதை விடவும் அவர் கொஞ்சம் கூடுதலாக அடிக்க வேண்டும், அப்போதுதான் அவரது பங்கை அவர் பூர்த்திசெய்வதாகும்.

ஒரு சில மோசமான நாட்கள், தோல்வி என்று அனுமதிக்கும் அளவுக்கு நாங்கள் அவ்வளவு வலுவான அணியல்ல.

ஷுப்மன் கில் நன்றாக ஆடினார். அவரது ஷாட்களில் சில முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக இருந்தாலும் பார்க்க உற்சாகமாக இருந்தது. அவருக்கு கிடைத்த முதல் நிஜ வாய்ப்பை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். போட்டியை வென்றதில் பெரிய பங்களிப்பு செய்தார்.

இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங். சிஎஸ்கே அடுத்ததாக சிஎஸ்கே, கோலியின் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x