Published : 30 Apr 2018 08:12 PM
Last Updated : 30 Apr 2018 08:12 PM

10 ஆண்டுகளில் முதல் முறையாக…ஐபிஎல் போட்டியில் தொடங்குகிறதா அணி மாறும் படலம்?

ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டு அணிகளுக்கு இடையே வீரர்களை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் ‘மிட்சீசன் டிரான்ஸ்பர்’ தொடங்க உள்ளது.

கால்பந்து போட்டிகளில்தான் இந்த மிட்சீசன் டிரான்ஸ்பர் முறை இருந்து வந்தது. இப்போது முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகிறது. அதாவது, கிளப் அணிகளுக்கு இடையே சீசனின் நடுப்பகுதியில் அணிகள் தங்களிடம் உள்ள வீரர்களை பரிஸ்பரம் பரிமாறிக்கொண்டு, தேவைக்கு ஏற்ப பணத்தை பெற்றுக்கொள்வார்கள்.

இப்போது ஐபிஎல் போட்டியும் ஏறக்குறைய பாதி முடிந்துவிட்ட நிலையில், நடுப்பகுதியில் மிட்சீசன் டிரான்ஸர் இருக்கும் எனத் தெரிகிறது. 14சுற்றுகள்கொண்ட ரவுண்ட் ராபின் முறையில் ஏறக்குறைய அனைத்து அணிகளும் 6 போட்டிகளுக்கு மேல் விளையாடிவிட்டன. ஆதலால், மிட்சீசன் டிரான்ஸ்பர் முறை தொடங்கும் . ஏலம் எடுக்கப்பட்ட அணியில் சிறப்பாக செயல்படாத, வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் டிரான்ஸ்பர் அணிக்குச் சென்று சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு அணியும் டிரான்ஸ்பருக்கான வீரர்களைத் தேர்வு செய்து வைத்துள்ளன. இந்த டிரான்ஸ்பர் மூலம் வீரர்களுக்குதான் அதிகமான பயன் உண்டு.

எப்போது டிரான்ஸ்பர் தொடங்கும்

ஐபிஎல் போட்டிகளில் 28-வது ஆட்டங்களில் இருந்து 42-வது ஆட்டம்வரை இந்த மிட்சீசன் டிரான்ஸ்பர் தொடரும். அணி நிர்வாகத்தினர் இந்த 12 நாட்களில் தங்களிடம் இருக்கும் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

எப்படி டிரான்ஸ்பர் நடக்கிறது.

ஒவ்வொரு அணியும் களமிறங்காமல், அல்லது அதிகமான வாய்ப்பு கிடைக்காமல் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் இருப்பார்கள். இவர்கள் பரிமாற்றம் செய்யத்தகுதியான வீரர்கள் ஆவர். அதாவது ஒரு வீரர் குறைந்தபட்சம் 2 போட்டிகள் கூட விளையாடதவர்கள் இந்த பரிமாற்றத்துக்கு தகுதியானவர்கள்.

எத்தனை வீரர்கள்

மும்பை அணியில் ஆடம் மில்னே, ஜே.பி.டுமினி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் சந்தீப் லேமிசானே, சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கோலின் டி கிராண்ட்ஹோமே, மொயின் அலி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டேவிட் வில்லே ஆகியோர் நீக்கப்படலாம் தெரிகிறது. இந்த பரிமாற்றம் செய்யும் போது, இரு அணிகளும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் மட்டும் இந்த பரிமாற்றம் நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x