Published : 30 Apr 2018 10:43 AM
Last Updated : 30 Apr 2018 10:43 AM

பீல்டிங்கில் சொதப்பும் நாங்கள் வெற்றி பெற தகுதியில்லாதவர்கள்: விராட் கோலி காட்டம்

கொல்கத்தாவுக்கு எதிராக மேலும் ஒரு போட்டியைத் தோற்ற ஆர்சிபி கேப்டன் உள்முகமாக யோசிக்க நிறைய உள்ளது, டெல்லியின் கம்பீர் அப்படி யோசித்தார், ரோஹித் சர்மாவும் முடிந்த அளவு முயற்சி செய்து பார்க்கிறார், கேப்டன்சியில் தோனி வேறு ஒரு உயரத்தில் இருக்கிறார், ஆனால் கோலியிடம் உத்வேகம் இல்லை என்பது தெரிகிறது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து விராட் கோலி கூறியதாவது:

ஒவ்வொரு முறை இங்கு ஆடும்போதும் பிட்ச் எங்களுக்கு சில ஆச்சரியங்களை அளித்து வருகிறது. 175 ரன்கள் உண்மையில் நல்ல ஸ்கோர். நாங்கள் 165 ரன்களை யோசித்துக் கொண்டிருந்தோம். விக்கெட்டுகள் விழுந்த பிறகு 10 ரன்களை போனஸாக எடுத்துள்ளோம்.

ஆனாலும் திரும்பிப்பார்க்கையில் நாங்கள் வெற்றி பெற தகுதியானவர்கள் அல்ல. கடினமாக முயற்சி செய்யவில்லை. எங்கள் மீது நாங்களே கடுமையாக இருக்க வேண்டியுள்ளது.

நாங்கள் 11 பேரும் ஒன்றிணைந்து களத்தில் உத்வேகத்தைக் கொண்டு வர வேண்டும். இப்படி பீல்டிங் செய்தால் நாங்கள் வெற்றி பெற தகுதியற்றவர்கள்.

சிங்கிள்களெல்லாம் பவுண்டரியாகும் விதத்தில் பீல்டிங் செய்தால் நாங்கள் எப்படி வெற்றி பெற முடியும்? இன்று நாங்கள் நன்றாக ஆடவில்லை. இனி வரும் 7 போட்டிகளில் 6-ல் வென்றால்தான் தகுதி பெற முடியும். நாம் அந்த மைண்ட் செட்டில் இருக்க வேண்டும். ஒவ்வொரு போட்டியும் இனி அரையிறுதிதான்.

இனி தவறுகளுக்கோ தயக்கங்களுக்கோ இடமில்லை. ஆட்டத்தின் தரத்தை உயர்த்தி இதைவிட இனி சிறப்பாக ஆடுவோம் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கூறினார் விராட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x