Published : 09 Apr 2018 05:35 PM
Last Updated : 09 Apr 2018 05:35 PM

தாய்லாந்து நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நடிகர் மாதவனின் மகன்

தாய்லாந்தில் நடந்த ஏஜ் குரூப் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள சுவர்ணபூமி கேம்பஸில் உள்ள அசம்ஸன் பல்கலையில் தாய்லாந்து ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் தமிழ்திரைப்பட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டையில் பிரிவில் கலந்து கொண்டார்.

இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட வேதாந்த் மாதவன் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டையில் பிரிவில் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். இந்த செய்தியை வேதாந்தின் தந்தையான மாதவன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து இன்ஸ்ட்ராகிராமில் நடிகர் மாதவன் தனது மகன் வேதாந்தின் புகைப்படத்தை பதிவிட்டு வெளியிட்ட செய்தியில், ‘தாய்லாந்தில் நடந்த 2018-ம் ஆண்டுக்கான தாய்லாந்து ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் எனது மகன் வேதாந்த் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். அதில் 1500 மீட்டர் ப்ரீஸ்டையில் பிரிவில் வேதாந்த் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். நாட்டுக்காக வேதாந்த் வென்றுள்ள முதல் பதக்கம் இதுவாகும். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவருக்கும் நன்றி, உங்களின் ஆசிகள் என் மகனுக்கு தேவை’எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x