Published : 06 Apr 2018 07:57 AM
Last Updated : 06 Apr 2018 07:57 AM

டெல்லியை வழிநடத்தும் கவுதம் காம்பீர்

பிஎல் தொடரில் தொடர்ச்சியாக ஏமாற்றம் அடைந்து வரும் ஒரே அணி டெல்லி டேர்டெல்வில்ஸ்தான். ஆனால் இம்முறை கதை வேறு. ஆக்ரோஷமான ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7 ஆண்டு காலம் கொல்கத்தா அணிக்காக விளையாடி அந்த அணிக்கு இரு முறை கோப்பையை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டனான கவுதம் காம்பீரும் சொந்த மாநிலத்தை சேர்ந்த தொழில்முறை அணிக்கு கேப்டனாக திரும்பி இருப்பது பலமாக கருதப்படுகிறது. அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல்லும் அணிக்கு திரும்பி இருப்பது பேட்டிங்கை வலுப்பெறச்செய்யும்.

பேட்டிங்கில் அதிரடி வீரர்களாக காலின் மன்றோ, மேக்ஸ்வெல், ஜேசன் ராய், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இளம் வீரர்களான மன்ஜோத் கர்லா, பிருத்வி ஷா ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பந்து வீச்சில் ரபாடா காயம் காரணமாக விலகியிருப்பது சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. டிரென்ட் போல்ட், முகமது ஷமி, கிறிஸ் மோரிஸ் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும்.

அணி விவரம்

கவுதம் காம்பீர் (கேப்டன்), ஸ்ரேயஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ், ரிஷப் பந்த், மேக்ஸ்வெல், ஜேசன் ராய், காலின் மன்றோ, பிருத்வி ஷா, ராகுல் டிவாட்டியா, விஜய் சங்கர், முகமது ஷமி, டிரென்ட் போல்ட், ஹர்ஷால் படேல், ஆவேஷ் கான், சபாஷ் நதீம், அமித் மிஷ்ரா, டேனியல் கிறிஸ்டியன், ஜெயந்த் யாதவ், குர்கீரத் சிங் மான், மன்ஜோத் கர்லா, ஓஜா, சயன் கோஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x