Published : 06 Apr 2018 07:55 AM
Last Updated : 06 Apr 2018 07:55 AM

நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ்

றிமுக தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் வியக்க வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு வருட தடைக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது. தடை காரணமாக ஸ்டீவ் ஸ்மித் விளையாடாததால் அஜிங்க்ய ரஹானே அணியை வழிநடத்த உள்ளார். கடந்த சீசனில் புனே அணிக்காக விளையாடிய பெரும்பாலான வீரர்களை அப்படியே ராஜஸ்தான் அணி வளைத்து போட்டுள்ளது.

பிக்பாஷ் லீக் தொடரில் ரன் வேட்டையாடிய ஆஸ்திரேலியாவின் டி’ ஆர்சி ஷார்ட் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஹென்ரிச் கிளாசென், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், ரஹானே, சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். ரூ.11.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஜெயதேவ் உனத்கட் பந்து வீச்சில் சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடும். தவால் குல்கர்னி, பென் ஸ்டோக்ஸ், பென் லாக்லின், அனிகெட் சர்மா, அனுரீத் சிங் ஆகியோரும் வலுசேர்க்க தயாராக உள்ளனர்.

அணி விவரம்

அஜிங்க்ய ரஹானே (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஹென்ரிச் கிளாசென், டி ஆர்சி ஷார்ட், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, ஜதின் சக்சேனா, ஸ்டூவர்ட் பின்னி, மகிபால் லாம்ரோர், ஜெயதேவ் உனத்கட், துஷ்மந்தா சமீரா, ஸ்ரேயஸ் கோபால், பென் லாக்லின், ஜஹிர் கான், அனுரீத் சிங், அனிகெட் சர்மா, தவால் குல்கர்னி, கே.கவுதம், ஜோப்ரா ஆர்ச்சர், பிரசாந்த் சோப்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x