Published : 03 Mar 2018 06:27 PM
Last Updated : 03 Mar 2018 06:27 PM

ஸ்டீவ் ஸ்மித் 10,000 ரன்கள்; எல்கரிடம் அவுட்டான அசிரத்தை: ட்விட்டர்வாசிகளின் ‘கமெண்ட்’

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் தனது 10,000 சர்வதேச கிரிக்கெட் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதனைக் கொண்டாடும் ட்விட்டர்வாசிகள், டீன் எல்கர் என்ற பகுதி நேர பவுலரிடம் எல்.பி.ஆகி 2வது இன்னிங்சில் வெளியேறியது பற்றி கேலியும் கிண்டலுமடித்து வருகின்றனர்.

நடபெற்று வரும் டர்பன் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் முதல் இன்னிங்ஸில் இடது கை ஸ்பின்னர் மஹராஜ் பந்தை கட் செய்ய முயல டிகாக் கிளவ்வில் பட்டு டிவில்லியர்ஸிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

இரண்டாவது இன்னிங்சில் 38 ரன்கள் எடுத்து ஆடிவந்த நிலையில் பெடல் ஸ்வீப் ஆட முயன்று பீட் ஆகி கால்காப்பில் வாங்கினார், எல்கர் இந்தப் பந்தை நல்ல ‘டிர்ஃப்டுடன்’ அருமையாக வீசினார். கால்காப்பில் வாங்க, வழக்கம் போல் ரிவியூ செய்தார், ஆனால் இம்முறை தர்மசேனா தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதே இன்னிங்சில் முன்னதாக மஹராஜ் பந்தில் கால்காப்பில் வாங்கி களநடுவர் பிளம்ப் அவுட்டை நாட் அவுட் கொடுத்ததால் தென் ஆப்பிரிக்காவின் ரிவியூ ‘அம்பயர்ஸ் கால்’ என்றாகி வீணானது ஸ்மித் தப்பினார், ஆனால் எல்கரிடம் தப்ப முடியவில்லை.

தற்போது ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்களுடன் மொத்தம் 362 ரன்கள் முன்னிலியுடன் வலுவாகச் சென்று கொண்டிருக்கிறது.

இதன் மூலம் எல்கரிடம் இருமுறை ஆட்டமிழந்த ஒரே வீரர் என்ற எதிர்மறைப் பெருமையையும் ஸ்மித் தட்டிச் சென்றுள்ளார். அதே போல் 10,000 ரன்களை தன் 200வது போட்டியில் எடுத்தும், 10,000 ரன்களை விரைவில் எடுத்த ஆஸி,வீரராகவும் 10,000 சர்வதேச ரன்கள் எடுக்கும் 13வது ஆஸி.வீரராகவும் திகழ்கிறார் ஸ்மித்.

தற்போதைய பேட்ஸ்மென்களில் விராட் கோலி 331 போட்டிகளில் 17,125 ரன்கள், 55.60 சராசரி, 56 சதங்கள், 80 அரைசதங்களுடன் முன்னிலை வகிக்கிறார். இரண்டாவதாக ஜோ ரூட் 195 மேட்ச்களில் 10,770 ரன்கள், 50.80 சராசரி, 23 சதங்கள் 68 அரைசதங்களுடன் உள்ளார், 3வதாக ஸ்மித் உள்ளார்.

இந்நிலையில் ட்விட்டர் கமெண்ட்கள் சில:

மோஹன்தாஸ் மேனன்: டீன் எல்கர் தற்போது 14 டெஸ்ட் விக்கெட்டுகள். இதில் ஸ்மித்தின் விக்கெட் 2.

பிரைடன் கவர்டேல்: நம்ப முடிகிறதா? ஸ்டீவ் ஸ்மித் 2வது முறையாக எல்கரிடம் அவுட். 2014-ல் கேப்டவுன் டெஸ்ட்டில் ஸ்மித்தை பவுல்டு செய்தார் எல்கர், இப்போது எல்.பி.

ரும்மான் ரயீஸ் பெயரில் சஜ் சாதிக்: விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு எதிராக பவுலிங் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் வீழ்த்த முடியும் என்று நம்புகிறேன்.

ஸ்போர்ட்ஸ்பெட்.காம்.ஏயு: கிரிக்கெட் களத்தில் நான் 2 விஷயங்களை எதிர்பார்க்கவேயில்லை. சன்பிளவர் ஆயில் ஸ்பான்சரில் ஒரு டெஸ்ட் தொடர், 2வது ஸ்மித்தை டீன் எல்கர் வீழ்த்துவது.

விஸ்டன்: பந்து லெக் திசையில் செல்வதாக சிக்னல் செய்தும் ஸ்டீவ் ஸ்மித் இடது கை ஸ்பின்னரிடம் அவுட். அதுவும் ஒரே போட்டியில் 2வது முறையாக.

லூகாஸ்: ஸ்மித்தை வீழ்த்த இதுதான் ப்ளூ பிரிண்ட்.

லுங்கனி ஸமா: ஸ்டீவ் ஸ்மித் என்ற மிகப்பெரிய விக்கெட்டை வீழ்த்தியவர் டீன் எல்கர்! பால் ஆஃப் த செஞ்சுரி என்று பிரெஸ் பாக்ஸில் முணுமுணுப்புகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x