Published : 03 Mar 2018 09:35 AM
Last Updated : 03 Mar 2018 09:35 AM

சென்னை- மும்பை இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால் நெருக்கடியின்றி விளையாடக்கூடும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் சென்னை அணி 2-வது இடத்துக்கு முன்னேறக்கூடும். மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. எனினும் இந்த சீசனை வெற்றியுடன் முடிக்க அந்த அணி முயற்சிக்கக்கூடும்.

மும்பை அணி 23 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால், 25 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கும் கேரளாவை அந்த அணி பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை பிடிக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x