Last Updated : 13 Feb, 2018 07:21 PM

 

Published : 13 Feb 2018 07:21 PM
Last Updated : 13 Feb 2018 07:21 PM

தரமும் திசையும் வழியும் மறந்த தமிழ்நாடு கிரிக்கெட்: பிரச்சினைகள் என்ன?

தமிழக கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. இளம் திறமைகள் மேலே வருவதில் சிக்கல், மூத்த வீரர்களின் அர்ப்பணிப்புகளில் எழும் கேள்விகள், பிட்ச்களின் தன்மை, எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்று தெரியாத, புரியாத நிலை என்று தமிழ்நாடு கிரிக்கெட்டின் பிரச்சினைகள் பலப்பல.

இந்த சீசனில் அனைத்து உள்நாட்டுத் தொடர்களிலும் மோசமாக ஆடியுள்ளது தமிழ்நாடு அணி, ரஞ்சி கோப்பை, தற்போது நடைபெறும் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் இரண்டிலும் லீக் சுற்றைத் தாண்டவில்லை தமிழ்நாடு அணி.

எதிர்கொள்ளும் பலபிரச்சினைகளில் கிரிக்கெட் போட்டி ஷெட்யூள்களின் நெரிசல், லீக் கிரிக்கெட்டில் அதிர்ச்சிகரமான முறையில் தரமற்ற நிலை ஆகியவை உட்பட தமிழ்நாடு அணி ஒருகாலத்தில் அச்சமூட்டும் எதிரணியாக இருந்ததிலிருந்து இன்று ‘சாதாரண’ அணியாகத் திகழ்கிறது.

பேட்டிங்கில் எந்தவித கேரக்டரும் இல்லை, பவுலிங்கில் தாக்கம் இல்லை, பல கேட்ச்கள் தரையில் வழியவிடப்பட்டன. ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே டிராபி போன்ற தொடர்களின் பெரும்பகுதியில் தினேஷ் கார்த்திக் இல்லை. தினேஷ் கார்த்திக் மாநில அணிக்காக சுயநலமில்லாமல், நேயமும், உணர்வும் கொண்டவராக ஆடும் ஒரு வீரர்.

விஜய் ஹசாரே டிராபியின் முந்தைய சாம்பியனான தமிழ்நாடு அணி இம்முறை கோவா, ம.பி., மும்பை, ஆந்திர அணிகளிடம் உதை வாங்கியது. நாளை ராஜஸ்தான் அணியுடன் பயனற்ற ஒரு போட்டியில் மோதுகிறது தமிழக அணி. தமிழ்நாடு கிரிக்கெட்டுக்கு இதைவிட மோசமானது நிகழ்ந்ததில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செயலில் இறங்கி கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

இந்த துர்சொப்பன சீசனில் அணித்தேர்வாளர்களும், அணி நிர்வாகமும் விளையாடும் 11 வீரர்கள் தேர்வில் ஒத்தகருத்தை எட்டவில்லை என்று தெரிகிறது. இது அணியில் ஒத்திசைவும் நம்பிக்கையும் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையைக் கூற வேண்டுமெனில் சில அணித் தேர்வுகளும், பேட்டிங் ஆர்டரும் திகைப்பூட்டுவதாக இருக்கிறது. பலபரிமாண கிரிக்கெட் வீரர்கள் இருந்தால் அவர்களது கூடுதல் திறமைகளை முழு அளவில் பயன்படுத்த வேண்டுமே தவிர அதனை மட்டுப்படுத்தக் கூடாது. அனைத்தையும் இழந்த பிறகு பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனிட்கர் அணியின் அணுகுமுறை குறித்து கடும் வார்த்தைகளைக் கூறினார், ஆனால் அவர் முன்னமேயே சாட்டையைச் சொடுக்கியிருக்க வேண்டும்.

தமிழ்நாடு கிரிக்கெட் பலதரப்பட்ட சவால்களை எதிர்கொள்கிறது. இளம் பவுலர்கள் பெரிய அளவில் உருவாகவில்லை, நகரில் பள்ளிகள் மட்டம் முதல் முதல் டிவிஷன் லீக் வரை மோசமான, மந்தமான பிட்ச்கள், கேப்டன்களில் தற்காப்பு மன நிலை ஆகியவையே பின்னடைவுகளுக்குக் காரணம்.

“முதல் டிவிஷன் லீக் கிரிக்கெட்டின் தரம் மிகவும் வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது. பிட்ச்களில் ஒன்றுமேயில்லை. இந்தப் பிட்ச்களினால் நல்ல பவுலர்களோ, நல்ல பேட்ஸ்மென்களோ உருவாக வாய்ப்பேயில்லை” என்று பெயர் கூற விரும்பாத முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு கிரிக்கெட் புதிய திசையை நோக்கியும் புதிய பார்வையையும் நோக்கி நகர வேண்டிய காலக்கட்டம் இதுவே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x