Published : 11 Feb 2018 09:07 AM
Last Updated : 11 Feb 2018 09:07 AM

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா

முத்தரப்பு டி 20 தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மெல்பர்னில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் 137 ரன்கள் சேர்த்தது. டாப் ஆர்டர் வீரர்களான அலெக்ஸ் ஹெல்ஸ் 3, ஜேசன் ராய் 8, டேவிட் மலான் 10 ரன்களில் வெளியேற 4 ஓவர்களில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி அதன் பின்னர் சரிவில் இருந்து மீளவில்லை. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 46, சேம் பில்லிங்ஸ் 29, ஜேம்ஸ் வின்ஸ் 21 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.

138 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலியா 14.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 39, டார்சி ஷார்ட் 36, கிறிஸ்லின் 31 ரன்கள் சேர்த்தனர். ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x