Published : 11 Feb 2018 07:56 AM
Last Updated : 11 Feb 2018 07:56 AM

குறைந்த ஓவர் போட்டி தெ.ஆ.வுக்கு சாதகமானது: கோலி; அச்சம் தவிர்- மார்க்ரம்

வாண்டரர்ஸ் வாழ்வா சாவா ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா டக்வொர்த் முறை என்றாலும் அதிரடியில் வெற்றிபெற்றது. இது குறித்து ஆட்டம் முடிந்தவுடன் விராட் கோலி சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்திய அணி முதலில் பேட் செய்து 289 ரன்களைக் குவித்தாலும் 20-30 ரன்கள் குறைவாக மட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகு டிவில்லியர்ஸ் வருகை புதிய உத்வேகத்தை அளிக்க மழையும் கைகொடுக்க இலக்கு குறைக்கப்பட்டாலும் 28 ஓவர்களில் 202 ரன்கள் என்பது கிட்டத்தட்ட ஓவருக்கு 8 ரன்கள் பக்கம் தேவையாகும். ஆனால் ஆட்டத்தை 25.3 ஒவர்களில் முடித்து தொடரை இழக்காமல் இருக்கும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் இந்திய கேப்டன் கோலி கூறியதாவது:

2வது இன்னிங்ஸில் பந்துகளுக்கும் ரன்களுக்குமான இடைவெளி 35. இது டி20 ஆட்டமாக மாறியது. தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற தகுதியுடையதானது, இன்று இரவு எங்களுக்கு வெற்றி பெற தகுதியில்லை.

மாலையில் பிட்ச் வேகமடைந்தது. இரண்டாவது பாதியில் வீரர்கள் செட்டில் ஆகவில்லை. பந்து கொஞ்சம் ஈரமாக இருந்தது, கொஞ்சம் ஈரமாக இருந்தது, அதிக ஈரமில்லை.

ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் பந்துகள் திரும்பின. அவர்கள் திடீர் புது ஷாட்களை முயன்றனர் அது கைகொடுத்தது. ஆட்டம் குறைந்த ஒவர்கள் ஆனதால் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது. அதாவது அடித்து ஆடியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

தெ.ஆ. கேப்டன் மார்க்ரம்: தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிக்குத் திரும்பியதால் நிம்மதி அடைந்தோம். இந்திய அணி மீது அழுத்தம் ஏர்படச் செய்தது நல்ல உணர்வை அளித்தது.

மின்னல், இடியினால் இந்திய இன்னிங்ஸ் நடுவில் நின்றது மறைமுக ஆசீர்வாதமாக அமைந்தது. அவர்களது ரிதம் பாழானது. 290 ரன்களுக்கு அவர்களை மட்டுப்படுத்தியதில் திருப்தி.

அச்சம் தவிர், களத்தில் இறங்கி வெளுத்து வாங்கி எங்களை வெளிப்படுத்திக் கொள்வது என்பதுதான் செய்தி. மீண்டும் போராடுவோம்,

இன்னும் எங்களது முழுமுதல் சிறப்புக்கு வரவில்லை, ஒரு அடி முன்னேறி இருக்கிறோம், என்றார் மார்க்ரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x