Last Updated : 05 Feb, 2018 05:16 PM

 

Published : 05 Feb 2018 05:16 PM
Last Updated : 05 Feb 2018 05:16 PM

ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் போலிங்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், இடதுகை வேகப்பந்துவீச்சாளருமான டக்கி போலிங்கர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.

36 வயதான போலிங்கர் கடந்த 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானார். இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள போலிங்கர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது இவருக்கு சாதனையாக அமைந்தது.

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இதுவரை 39 போட்டிகளில் பங்கேற்றுள்ள போலிங்கர் 62 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 9 டி20 போட்டிகளில் விளையாடிய போலிங்கர் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்தில் ஆஷஸ் போட்டித் தொடரிலும் போலிங்கர் விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு டர்பனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். ஐபிஎல் தொடரில் 2010ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் போலிங்கர் இடம் பெற்று இருந்தார்.இதேபோல், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், சிட்னி தண்டர்ஸ்,சிட்னி சிக்சர்ஸ் அணியிலும் போலிங்கர் விளையாடியுள்ளார். 124 முதல்தர போட்டிகளில்விளையாடியுள்ள போலிங்கர் 411 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் டோவ் போலிங்கர் சிட்னியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

ஆஸ்திரேலிய அணியுடனான எனது பயணம் மிகப்பெரியது. அஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியது, மிகச்சிறந்த நண்பர்களையும், மனிதர்களையும் சந்தித்தேன். ஆஸ்திரேலிய அணியில் மிகச்சிறந்த கேப்டன்கள் கீழ் பணியாற்றி இருக்கிறேன். அதேபோல், நியுசவுத் வேல்ஸ் அணியிலும், ஸ்டீவ் வாக், மைக்கேல் கிளார்க், ரிக்கி பாண்டிங் ஆகியோர் கீழும் விளையாடி உள்ளேன்.

இப்போது எனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நான் எடுத்துள்ளேன். என் மனைவி, குழந்தைகளுக்காக நேரத்தை செலவி இருக்கிறேன். அவர்கள் இல்லாமல் வாழ்க்கையில் எந்த விசயத்தையும் அடைய முடியாது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x