Published : 05 Feb 2018 08:46 AM
Last Updated : 05 Feb 2018 08:46 AM

தி இந்து குழுமம், தைரோகேர் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கபடி போட்டியில் ஏலகிரி செந்தமிழ் அணி முதலிடம்

தி இந்து குழுமம், தைரோகேர் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான கபடி போட்டியின் 2-வது கட்ட ஆட்டத்தில் ஏலகிரி செந்தமிழ் அணி முதலிடம் பிடித்தது. அந்த அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

தி இந்து குழுமம், தைரோகேர் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு கபடி அமெச்சூர் சங்க ஆதரவுடன் மாநில அளவிலான கபடி போட்டிகள் திருச்சி, சென்னை, மதுரை, கோவை, சேலம், வேலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. இந்த கபடி தொடருக்கு பிளாக் தண்டர், சுகுனா பம்ப்ஸ் மற்றும் மோட்டார்ஸ், ஆர்த்தோ ஓன், ஜேஎம் ஆகிய நிறுவனங்களும் ஸ்பான்சர்களாக உள்ளனர். இதில் முதல் கட்டமாக திருச்சியில் நடைபெற்ற போட்டியில் காவல்துறை அணி முதலிடம் பெற்றது.

இதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த 2 நாட்களாக கபடி போட்டி நடத்தப்பட்டது. 36 அணிகள் கலந்து கொண்டு விளையாடிய இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று ஏலகிரி செந்தமிழ் ஏ அணி 30-29 என்ற புள்ளிகள் கணக்கில் விழுப்புரம் எஸ்டிஏடி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

அந்த அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த விழுப்புரம் எஸ்டிஏடி அணி ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசை பெற்றது. அரை இறுதியில் தோல்விகளை சந்தித்த விழுப்புரத்தை சேர்ந்த அணைக்கரை கோட்டாளம், மட்டிகை குறிச்சி அணிகளுக்கு தலா ரூ.7,500 பரிசாக வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட துணை ஆட்சியர் பிரியங்கா, ஜோலார்பேட்டை நகர அதிமுக செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x