Published : 01 Feb 2018 07:36 AM
Last Updated : 01 Feb 2018 07:36 AM

‘கேலோ இந்தியா’ பள்ளி விளையாட்டு போட்டிகள்: தங்கம் வென்றனர் தமிழக மாணவர்கள்

டெல்லியில் நேற்று தொடங்கிய கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் நாளிலேயே தங்கம் வென்று அசத்தினர்.

விளையாட்டு மேம்பாட்டிற்கான தேசிய திட்டம் ‘கேலோ இந்தியா’ வின் ஒரு பகுதியாக, ‘கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகள்’ மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இப்போட்டிகளை நேற்று டெல்லியில் உள்ள சர்வதேச விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

பல்வேறு மாநிலங்களிலிருந்து 17 வயதிற்குப்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 186 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர்.

16 பிரிவுகள்

தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, கையுந்து பந்து, ஹாக்கி, நீச்சல் உள்ளிட்ட 16 பிரிவுகளில் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த போட்டிகளில், தமிழக மாணவன் சி.பிரவீன், மாணவி கொலஷியா ஆகியோர் டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்றனர். மேலும், 1500 மீ. ஓட்டப்பந்தயத்தில் மாதேஷ் என்ற மாணவனும், குண்டு எறிதலில் நெனால் சூசன் என்ற மாணவியும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் மாணவி சபிதா வெண்கலம் வென்றுள்ளார்.

அமைச்சருடன் சந்திப்பு

முன்னதாக, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோரை தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு அறிவியல் துறை, ஊட்டியில் மலை மேலிட பயிற்சி முகாம் மற்றும் தமிழகத்தில் கூடுதலாக இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x