Published : 06 Jan 2018 12:37 PM
Last Updated : 06 Jan 2018 12:37 PM

டிவில்லியர்ஸ் ஒரு ஓவரில் போட்டியை மாற்றி விட்டார்: தெ.ஆ. பேட்டிங் பயிற்சியாளர்

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் நேற்று புவனேஷ்வர் குமார் ஆச்சரியமளிக்கும் முதல் 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தென் ஆப்பிரிக்காவை அதிர்ச்சியுறச்செய்தார். ஆனால் அதன் பிறகு டிவில்லியர்ஸ் ஒரு ஓவரில் போட்டியின் போக்கை மாற்றியதாக தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டேல் பெங்கன்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

அதாவது புவனேஷ்வர் குமாரின் ஒரு ஓவரில் டிவில்லியர்ஸ் இரு பந்துகளை கவர் திசையில் பவுண்டரிக்கு அனுப்பினார், பிறகு இரண்டு ஷார்ட் பிட்ச் பந்துகளை பாயிண்ட் திசையில் அறைந்து மேலும் 2 பவுண்டரிகள் என 4 பவுண்டரிகளை விளாசினார், கிட்டத்தட்ட அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா உணவு இடைவேளைக்குள் 19 பவுண்டரிகளை விளாசியது. விராட் கோலியின் அனுபவமற்ற கேப்டன்சியினால் ரன்களைக் கட்டுப்படுத்தும் களவியூகம் அமைக்கப்படவில்லை. அஸ்வினையும் கொண்டு வந்து நெருக்கவில்லை.

இது பற்றி தென் ஆப்பிரிக்க பேட்டிங் பயிற்சியாளர் டேல் பெங்கன்ஸ்டைன் கூறும்போது, “அதிர்ஷ்டவசமாக எங்கள் மொபைல் போன்கள் கைவசம் இல்லை, இருந்திருந்தால் உபர் கார் புக் செய்து விடுதிக்குத் திரும்பியிருப்போம். தரமான பந்து வீச்சு இந்திய அணியினுடையது, அந்தத் தருணத்தில் எங்கிருந்து ரன் வரப்போகிறது என்று நான் கவலையடைந்தேன். ஆனால் ஜீனியஸ் டிவில்லியர்ஸ் மற்றும் டுபிளெசிஸ் ஆகியோர் ஆட்டத்தை மாற்றி விட்டனர்.

குறிப்பாக ஏபி ஒரு ஓவரில் ஆட்டத்தை மாற்றி விட்டார். பவுலர்களுக்கு திடீரென எந்த லெந்தில் வீசுவது என்று குழப்பம் ஏற்படச் செய்தார். பொதுவாக பேட்ஸ்மென் என்றால் ரன்கள் அடிக்க வேண்டும், இத்தகைய பிட்ச்களில் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கும். எனவேதான் ரன் அடிப்பதில் இவர்கள் கவனம் செலுத்தினர்.

டிவில்லியர்ஸ், டுபிளெசிஸ் இருவரும் அணிக்குத் திரும்பியதால் சராசரி 40 வைத்திருக்கும் டாப் 6 அணியில் தேவை. வலுவான பந்து வீச்சு, எங்கள் சிறந்த பேட்டிங் ஆகியவற்றுடன் களமிறங்கவே திட்டமிட்டோம்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x