Published : 06 Jan 2018 10:20 AM
Last Updated : 06 Jan 2018 10:20 AM

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ரூ.1.90 கோடியில் ஸ்கேட்டிங் வளையம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சென்னை நேரு உள் விளையாட்டரங்க வளாகத்தில் நவீன வசதியுடன் கூடிய திறந்த வெளிசறுக்கு வளையத்தை தமிழக முதல்வர் கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை நேரு உள்விளையாட்டரங்க வளாகத்தில் பன்னாட்டு அளவிலான போட்டிகளை நடத்த ஏதுவாக ரூ.1. 90 கோடி மதிப்பில் மின்னொளி வசதியுடன் திறந்த வெளி சறுக்கு வளையத்தை (outdoor skating rink) முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தமிழகத்தில் முதல்முறையாக சிந்தெடிக் மேற்பரப்பினால் அமைக்கப்பட்டுள்ள இந்த சறுக்குவளையம், 200 மீட்டர் சுற்றளவு கொண்டதாகும். இவ்வளையத்தில் ஸ்பீடு, ஆர்டிஸ்டிக் மற்றும் ஹாக்கி ஆகிய பிரிவுகளில் பல்வேறு வயது பிரிவினருக்கும் போட்டிகள் நடத்தலாம்.

இங்கு பயிற்சி பெறும் போது சறுக்கு விளையாட்டில் வேகமும், உறுதியும் அதிகரிக்கும். இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பெருமளவில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வெல்லும் வகையில் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். நிகழ்ச்சியில், அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டி, தலைமைச் செயலர் (பொறுப்பு) க.சண்முகம், விளையாட்டுத்துறை செயலர் தீரஜ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x