Published : 10 Dec 2017 06:40 PM
Last Updated : 10 Dec 2017 06:40 PM

நம் கண்களை திறந்து விடும் தோல்வி: ரோஹித் சர்மா ஒப்புதல்

இலங்கைக்கு எதிரான தரமான பந்து வீச்சில் மடிந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தத் தோல்வி நம் கண்களைத் திறக்கும் தோல்வி என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா கூறியதாவது:

இன்னு 2 ஆட்டங்கள் உள்ளன, இதைக்கூறும்போதே நான் இன்னொன்றையும் தெளிவு படுத்துகிறேன், இன்று தரநிலைக்கு ஏற்ப ஆடவில்லை. ரன்கள் எடுக்கவில்லை.

பவுலர்கள் அவர்களால் இயன்றதைச் செய்தனர். 70-80 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வித்தியாசமாக அமைந்திருக்கலாம். ஆனால் இன்று பேட்டிங்கினால் கோட்டை விட்டோம். இப்படிப்பட்ட பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளில் நன்றாக ஆட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். எப்போதுமே மட்டைப் பிட்சில் ஆடிக் கொண்டிருக்கக் கூடாது.

இன்று நம் பேட்ஸ்மென்களுக்குச் சாதகமான நாள் அல்ல. இது நம் கண்களைத் திறந்துள்ளது. இதிலிருந்து மீண்டு ஒன்றிணைந்து அடுத்த 2 போட்டிகளில் இறங்குவோம் என்று எதிர்பார்க்கலாம்.

தோனி இப்படிப்பட்ட இன்னிங்ஸ்களை பல ஆண்டுகளாக ஆடிவருகிறார், இத்தகைய சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அவருடன் யாராவது நின்றிருந்தால் வித்தியாசமாக அமைந்திருக்கும். அவர் தன்னந்தனையாக போராடினார்.

கேப்டனாக முதல் போட்டியில் தோல்வி என்பது நல்ல அனுபவமல்ல. ஆனால் நடந்ததை நாங்கள் மறக்க வேண்டும். அடுத்த 2 போட்டிகளில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டும்.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x