Published : 10 Dec 2017 09:29 AM
Last Updated : 10 Dec 2017 09:29 AM

சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து 4-வது சீசனின் 22-வது லீக் ஆட்டம் மும்பையில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப்சி அணியை எதிர்கொள்கிறது.

சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் கோவாவுக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில் அதன் பின்னர் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 9 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. சென்னை அணி கடைசியாக சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.

நடுக்கள வீரர் ரபேல் அகஸ்டோ, இனிகோ கால்டிரான், ஸ்டிரைக்கர் ஜே ஜே லால்பெகுலா நல்ல பார்மில் உள்ளனர். இதில் ஜே ஜே கடந்த ஆட்டத்தில் இரு கோல்கள் அடித்திருந்தார். இவர்கள் மூவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். மும்பை அணி 4 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. சொந்த மைதானத்தில் மீண்டும் ஒரு வெற்றியை வசப்படுத்தும் முனைப்பில் அந்த அணி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x