Last Updated : 31 Jan, 2017 10:20 AM

 

Published : 31 Jan 2017 10:20 AM
Last Updated : 31 Jan 2017 10:20 AM

வயது என்பது வெறும் நம்பர்தான்; மலிங்கா போல் செயல்படும் பும்ரா இந்திய அணியின் சொத்து: மனம் திறக்கும் ஆசிஷ் நெஹ்ரா

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையிலேயே 37 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா சேர்க்கப்பட்டிருந்தார். முதல் ஆட்டத்தில் அவர் சிறப்பாக செயல்படாத நிலையில் நேற்று முன்தினம் நாக்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் திறம்பட செயல்பட்டார்.

மொத்தம் 4 ஓவர்கள் வீசிய அவர் 28 ரன்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். தனது முதல் 3 ஓவர்களில் வெறும் 12 ரன்களே விட்டுக்கொடுத்த அவர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். அதிலும் இரண்டாவது ஓவரின் முதல் இரு பந்துகளில் 2 விக்கெட் களை கைப்பற்றி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

முக்கியமான கட்டத்தில் 3-வது விக்கெட்டாக பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டையும் கைப்பற்றினார். மார்ச் மாதம் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய நெஹ்ரா, அதன்பின்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற கையுடன் தனது முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தற்போது புத்துணர்ச்சியுடன் இங்கிலாந்து தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நெஹ்ரா கூறிய தாவது, இந்தியாவை பொறுத் தவரை, சிறப்பாக செயல்பட்டால் மக்கள், வாழ்த்துவார்கள். அதே வேளையில் அணி ஒருசில ஆட்டங்களில் தோல்வியை சந்திக்கும் சமயத்தில் அணியில் 15 வீரர்களையும் விமர் சிக்கமாட்டார்கள். மாறாக ஆசிஷ் நெஹ்ராவை நீக்க வேண்டும் என்று கூறுவார்கள். என்னை பொறுத்தவரையில் இது பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் வயது என்பது ஒரு நம்பர்தான்.

நாக்பூர் போட்டியில் 145 ரன்களே சேர்த்தபோதும் ஆரம்பத்திலேயே விக்கெட்கள் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தோம். அமித் மிஸ்ரா மட்டும் நோ பால் வீசாமல் இருந்திருந்தால் ஆட்டத்தை முன்கூட்டியே முடித்திருந்திருப்போம்.

அந்த சமயத்தில் பென் ஸ்டோக்ஸ் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசியதால் இங்கிலாந்து அணி முன்நோக்கி இருந்தது. டி 20 ஆட்டத்தில் கடைசி ஓவர் வரை என்ன நடைபெறும் என்பதை யாராலும் கூறமுடியாது.

கடைசி வரை ஜஸ்பிரித் பும்ரா மிகச்சிறப்பாக மனவலிமையுடன் வீசினார். பும்ரா இதுபோன்று சிறப்பாக செயல்படுவது ஒன்றும் முதன்முறையல்ல. கடைசி கட்டங் களில் அவருடன் நானும் இணைந்து பந்து வீசியுள்ளேன். கடைசி 4 ஓவர்களை வீசுவது என்பது எப்போதுமே கடினமான செயல்.

நான் பந்து வீச வரும்போது 4 ஓவர்களுக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை சிறப் பாக வீசினால் மட்டுமே ஆட்டத்தில் நம்மால் இருக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதிர்ஷ்டவசமாக 5 ரன்கள் மட்டும் கொடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸூம் ஆட்ட மிழந்தார்.

இதன் பின்னரே ஆட்டம் நம் பக்கம் திரும்பியது. ஆனால் எனது கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் விளாச ஆட்டத்தின் திசை மாறியது. அந்த பந்தில் நான் விக்கெட் வீழ்த்தியிருந்தால் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டிருக்கும்.

கடைசி ஓவரை பும்ரா சிறப்பாக வீசினார். அவர் பந்தில் ரன் சேர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஜாஸ் பட்லரை, பும்ரா வெளியேற்றியதுமே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. கடந்த ஓராண்டாகவே பும்ராவுடன் நான் டி 20 போட்டிகளில் இணைந்து விளையாடி வருகிறேன்.

கடைசி கட்டங்களில் சிறப்பாக செயல்பட அவர் அதிகம் விரும்பு வார். பும்ராவின் பலமே பழைய பந்தில், யார்க்கர்களையும், நேர்த்தி யாக குறைந்த வேகத்தில் வீசுவதும் தான். தினமும் அவர் கற்றுக் கொண்டே இருக்கிறார். இங்கிருந்து மேலும் சிறப்பாக செயல்பட வேண் டும் என்ற எண்ணம் கொண்டவர்.

ஒருநாள் போட்டிகளில் தாராளமாக 350, 380 ரன்கள் வரை குவிக்கப்பட்டது. இந்த ஆட்டங் களில் பும்ரா கடைசி கட்டங்களில் 5 அல்லது 3 ஓவர்கள் வரை வீசினார். அதிக ரன்கள் குவிக்கப்படும் ஆட்டங்களில் பந்து வீசுவதற்கும் மனவலிமை வேண்டும். இது போன்ற ஆட்டங்களில் பும்ராவின் வளர்ச்சியானது வரும் காலங்களில் இந்திய அணியின் சொத்தாக இருக்கும்.

பும்ரா மிகச்சிறந்த பந்து வீச்சாளர். அதிலும் கடைசி கட்டங்களில் தனித் துவமாக செயல்படும் திறன் கொண்டவர். மலிங்கா போன்று செயல்படும் அவர் பழைய பந்தில் அசத்தக்கூடியவர். அவரின் வித்தி யாசமான பந்து வீசும் தோர ணையை, புதிதாக களமிறங்கும் பேட்ஸ்மேன் கணிப்பது கடினமே. ஒருநாள் போட்டியாக இருந் தாலும், டி 20 ஆக இருந்தாலும் பும்ரா அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருப்பார்.

இவ்வாறு ஆசிஷ் நெஹ்ரா கூறினார்.

இங்கிலாந்துக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற ஜஸ்பிரித் பும்ரா முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பும்ரா தனது சிறப்பான பந்து வீச்சால் 2 விக்கெட்களை வீழ்த் தியதுடன் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 18-வது ஓவரிலும் பும்ரா 3 ரன்கள் மட்டும் வழங்கி யிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x