Published : 08 Nov 2016 08:33 AM
Last Updated : 08 Nov 2016 08:33 AM

மெஸ்ஸி அசத்தலில் பார்சிலோனா வெற்றி

மாட்ரிட் ஸ்பானிஸ் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா-ஷெவில்லா அணிகள் மோதின. இதில் லயோனல் மெஸ்ஸி இடம் பெற்ற பார்சிலோனா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 15-வது நிமிடத் தில் ஷெவில்லா வீரர் விட்டோலா கோல் அடிக்க அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. 43-வது நிமிடத்தில் பார்சிலோனா பதிலடி கொடுத்தது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி அசத்தலாக கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.

61-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் கோல் அடிக்க பார்சிலோனா 2-1 என முன்னிலை பெற்றது. அதன் பிறகு இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படாததால் பார்சிலோனா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அடித்த கோல் அவர் பார்சிலோனா அணிக்காக அடித்த 500-வது கோலாக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x