Last Updated : 16 Sep, 2016 05:31 PM

 

Published : 16 Sep 2016 05:31 PM
Last Updated : 16 Sep 2016 05:31 PM

மும்பைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அபாரம்

புதுடெல்லியில் நடைபெறும் மும்பைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

மேலும் மும்பை அணி களமிறங்கிய போது டிரெண்ட் போல்ட், முதல் ஓவரிலேயே மும்பை தொடக்க வீரர் பிஸ்டாவை 0-வில் வீழ்த்தினார், ஆனால் அதன் பிறகு அர்மான் ஜாஃபர் இறங்கி 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 24 ரன்கள் எடுக்க பவார் 5 ரன்கள் எடுக்க மும்பை 29/1 என்று முதல் நாளை முடித்தது.

மும்பையின் மிகச்சாதாரணமான பந்து வீச்சும், ஸ்பின் எடுக்காததும் நியூஸிலாந்து பேட்டிங்குக்கு சாதகமாக அமைந்தது. கேன் வில்லியம்சன் (50, 56 பந்துகள்) கிரீசில் மிகவும் சவுகரியமாக உணர்ந்தார். தொடக்க வீரர் டாம் லாதம் (55), ராஸ் டெய்லர் (41), சாண்ட்னர் (45) ஆகியோருடன் மார்க் கிரெய்க் 33 ரன்கள் எடுத்தும், சோதி 29 ரன்களை எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ 75 ஒவர்களில் 324 ரன்களுக்கு 7 விக்கெடுகளை இழந்த நிலையில் நியூஸிலாந்து டிக்ளேர் செய்தது.

மும்பை அணியில் ஸ்விங் பவுலர் பல்விந்தர் சாந்து ஜூனியர் தனது மித வேகப்பந்து வீச்சினால் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இதில் பரிசு விக்கெட்டாக கேன் வில்லியம்சன் விக்கெட்டும் அடங்கும்.

மும்பை ஸ்பின் பவுலர்களான விஷால் தபோல்கர், சித்தேஷ் லாத், விஜய் கோஹில் ஆகியோர் பந்துவீச்சில் ஒன்றுமேயில்லை.

உணவு இடைவேளை வரை 26 ஓவர்கலில் நியூஸிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்திருந்தது. மார்டின் கப்திலை பல்வீந்தர் சாந்து அவுட் ஸ்விங்கரில் வீழ்த்தினார். வில்லியம்சன், லாதம் இணைந்து 85 ரன்களை விரைவு கதியில் சேர்த்தனர். தபோல்கரை வில்லியம்சன் கவனித்தார், அவர் 14 ஓவர்களில் 75 ரன்களை வாரி வழங்கினார். 6 பவுண்டர்கள் 2 சிக்சர்களுடன் வில்லியம்சன் உணவு இடைவேளைக்கு முன்னர் சாந்துவிடம் வீழ்ந்தார்.

நியூஸிலாந்து அணியில் பேட்டிங் செய்த அனைவருமே இரட்டை இலக்கத்தை எட்டினர். நாளை 2ம் நாள் ஆட்டம், ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x