Published : 03 Jul 2017 12:45 PM
Last Updated : 03 Jul 2017 12:45 PM

முக்கியக் கட்டங்களில் விக்கெட்டுகளை இழந்தோம்: தோல்விக்குப் பிறகு கோலியின் வழக்கமான பேச்சு

சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கை நமக்கு சூசகமாகக் காட்டியதை பாகிஸ்தான் 90% காட்டியது, நேற்று மே.இ.தீவுகள் மீதமுள்ள 10%-ஐயும் காட்டி இந்திய அணியின் நட்சத்திர அந்தஸ்த்தை கேள்விக்குட்படுத்தியது.

குறைந்த இலக்கை விரட்ட முடியாமல் தோல்வி கண்டது இந்திய அணி.

இதே தோல்வியை மைக்கேல் கிளார்க், ஸ்மித், அல்லது மோர்கன், டிவில்லியர்ஸ் என்று யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள், கடுமையான வார்த்தைகளால்தான் இந்தத் தோல்வியை அறுதியிடுவார்கள். “இப்படிப்பட்ட ஆட்டம் பற்றி கூறுவதற்கென்ன இருக்கிறது?, படுமோசமாக ஆடினோம்” என்று வெளிப்படையாக கூறுவார்கள். ஆனால் இந்திய மனம் இதனை ஏற்றுக் கொள்ளாது, மோசமாக எது நடந்தாலும் ஒன்றுமே ஆகாதது போல் காண்பித்துக் கொண்டு இந்த மேலோட்டமான மனநிலையையே ஏதோ தன்னம்பிக்கை, ஆக்ரோஷம், தோல்வியினால் துவளாத மனம் என்பது போலவும் பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளும்.

மோசமான தோல்வி தன்னை ஒன்றும் அசைக்கவில்லை என்பது போன்ற ஒரு முகமூடி அணிந்த பேச்சை கோலி பேசினார்.

அதாவது, “நாங்கள் மே.இ.தீவுகளை 189 ரன்களுக்கு மட்டுப்படுத்தி மிக நன்றாக வீசினோம். பேட்டிங்கில் ஷாட் தேர்வு சிறப்பாக இல்லை. முக்கிய கட்டங்களில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தோம். ஆட்டம் முழுதும் உத்வேகத்தைத் தக்க வைக்க வேண்டும். மே.இ.தீவுகள் பவுலர்களுக்கு உரித்தான பெருமையை சேர்க்க வேண்டும். ரன் இல்லாத பந்துகளை வீசி நாங்கள் தவறுகளிழைக்கச் செய்தனர்.

இந்த பிட்ச் இரண்டகத் தன்மை கொண்டது என்பதைத் தவிர பிட்சில் வேறொன்றும் இல்லை. பவுலிங்கும், பீல்டிங்கும் அபாரமாக அமைந்தது, பேட்டிங்கில் தோல்வியடைந்தோம். அது இம்மாதிரி போட்டிகளில் ஏற்படலாம். இந்தத் தோல்வியை பின்னுக்குத் தள்ளி அடுத்த போட்டிக்கு புத்துணர்வுடன் வர வேண்டும்” என்று வழக்கமான பேச்சைப் பேசியுள்ளார் விராட் கோலி.

தனது ஷார்ட் பிட்ச் பந்து பலவீனம் பற்றியும் அவர் பேசவில்லை, பாகிஸ்தானுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் எந்த ஒரு சவாலும், போர்க்குணமும் இன்றி சரணடைந்த பிறகு கூட ‘தலையை நிமிர்த்தியே நாங்கள் இங்கிருந்து செல்கிறோம்’ என்றார்.

இந்திய கேப்டன்களில் கபில்தேவ் மட்டுமே அணி சரியாக ஆடவில்லையெனில் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததை நாம் பார்த்திருக்கிறோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x