Last Updated : 16 May, 2016 09:27 AM

 

Published : 16 May 2016 09:27 AM
Last Updated : 16 May 2016 09:27 AM

பாட்மிண்டன்: இந்தியா தோல்வி

சீனாவில் உள்ள குன்ஷன் நகரில் தாமஸ் கோப்பைக் கான பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் தாய்லாந்தை எதிர்த்து இந்தியா ஆடியது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா வின் ஜெயராம் 16 21 21 12 14 21 என்ற புள்ளிக்கணக்கில் தாய்லாந்தின் தனோன்காக்கிடம் தோற்றார். இரட்டையர் போட்டியில் இந்தியாவின் மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 17 21 6 21 என்ற கணக்கில் போடின் இஸ்ஸாரா - நிபிட்போன் ஜோடியிடம் தோற்றனர்.

மூன்றாவது போட்டியில் இந்திய வீரரான சாய் பிரனீத் 21 11 21 16 என்ற நேர் செட்களில் கோசித் பெட்பிரதாப்பை வீழ்த்தினார். இருப்பினும் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அக்‌ஷய் தேவல்கர்- ரன்கிரெட்டி ஜோடி தோற்றதைத் தொடர்ந்து தாய்லாந்து அணி 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x