Last Updated : 31 May, 2016 09:47 AM

 

Published : 31 May 2016 09:47 AM
Last Updated : 31 May 2016 09:47 AM

பலமான பந்து வீச்சால் ஐதராபாத் வென்றது: விராட் கோலி கருத்து

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியிடம் பெங்களூரு அணி தோல்வியடைந்து இம்முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

இந்த சீசனில் நாங்கள் விளையாடிய விதம் பெருமையாகவே இருந்தது. நானும், டி வில்லியர்ஸூம் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நாங்கள் சிறிதுநேரம் களத்தில் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும்.

இந்த தொடரில் 973 ரன்கள் சேர்த்து ஆரஞ்சு நிற தொப்பி பெற்றது ஊக்கமளிப்பதாக உள்ளது. எனினும் ஆட்டத்தின் முடிவால் இதை சிறப்பானதாக உணர முடியவில்லை. ஐதராபாத் அணி ஏன் வெற்றி பெற்றது என்றால், அவர்கள் சிறந்த பந்துவீச்சை கொண்டிருந்ததால் தான்.

பந்துகளை என்னால் நன்கு அடிக்க முடியும் என்பது தெரியும், அணிக்கு சிறந்த பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது. இந்த தொடரில் 4 சதங்கள் அடித்துள்ளேன். இந்த தொடரில் விளையாடிவிதம் எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

சாதனைகள் என்பதே முறியடிக்கப்படுவதற்காகத் தான். நான் தொடக்க வீரராக களமிறங்குவதால் ரன்கள் குவிக்க முடிகிறது. மற்ற வீரர்கள் 3 அல்லது 4-வது வீரர்களாக விளையாடுவதால் அதிக ரன்கள் சேர்க்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த தொடரில் நான் அடித்த பல சிக்ஸர்கள் எனக்கு ஆச்சர்யமளித்தது. நான் அதிகம் பேச விரும்பவில்லை. வெற்றி பெற்ற அணிக்கே இந்த இடம் உரித்தானது. இவ்வாறு விராட் கோலி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x